கவர்மெண்ட் சரியில்ல, சிஸ்டம் சரியில்லையா? ரஜினிக்கு பதில் சொல்கிறாரா அஜித்.. கிளம்பிய விவாதம்!

சென்னை: சிஸ்டம் சரியில்லை.. அதனால் தான் அரசியலுக்கு வரப் போகிறேன் என ரஜினிகாந்த் முன்னதாக கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர் பஞ்ச் கொடுக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் பேசியிருக்கும் காட்சி இணையத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

சமூக வலைதளங்களில் அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் நட்பாக இருந்து வரும் நிலையில், இந்த காட்சி இரு தரப்புக்கும் மத்தியில் சர்ச்சையையும் சண்டையையும் உருவாக்கி உள்ளது.

இயக்குநர் எச். வினோத் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியொரு வசனத்தை படத்தில் வைத்தார் என்கிற கேள்விகளையும் ரஜினி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

சிஸ்டம் சரியில்லை

சிஸ்டம் சரியில்லை

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப் போகிறேன் என கூறிக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், திடீரென அரசியல் பிரவேசத்தில் இறங்கியது போல சில பல மீட்டிங்குகளை நடத்தினார். அப்போது சிஸ்டம் சரியில்லை. அதை சரி செய்யவே அரசியலில் இறங்கப் போகிறேன் என்று கூறினார். இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என்றும் பன்ச் பேசினார். பின்னர், அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்பவும் இல்லை இனி எப்பவும் இல்லை என ரசிகர்களை ஏமாற்றி விட்டார்.

ரஜினிக்கு எதிராக

ரஜினிக்கு எதிராக

இந்த பஞ்ச் வசனத்தை எல்லாம் ரஜினி ரசிகர்களே மறந்து விட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசன காட்சி மீண்டும் அதை கிளறும் வகையில் இடம் பெற்றுள்ளதாக ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர். நடிகர் அஜித் குமார் இந்த வசனத்தை எப்படி ஓகே செய்து பேசினார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

நாம தான சிஸ்டம்

நாம தான சிஸ்டம்

வலிமை படத்தில் அம்மாவிடன் அர்ஜுன் கதாபாத்திரம் பேசும் வசனத்தில், நடிகர் அஜித் குமார், கவர்மென்ட் சரியில்லை.. சிஸ்டம் சரியில்லைன்னு திட்றோம்.. ஆனால், நமக்குன்னு ஒரு பிரச்சனை வரப்ப.. நேர்மையா இருக்காமா சுயநலம் ஆகிடுறோம்.. நாம தான சிஸ்டம்.. நாம சரியா இருந்தாதான சிஸ்டம் சரியா இருக்கும் என பேசியுள்ள வசனம் தான் தற்போது சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

ரசிகர்கள் சண்டை

ரசிகர்கள் சண்டை

இதுவரை ரஜினி ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்து வந்த நிலையில், அவர்களுக்கு இடையே சண்டையை மூட்டும் விதமாக இப்படியொரு வசனம் வலிமை படத்தில் இடம்பெற்றிருப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியை டார்கெட் செய்ய வேண்டும் என்றே இப்படியொரு வசனத்தை படத்தில் வைத்தார்களா? என்கிற கேள்வியையும் ரஜினி ரசிகர்கள் எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ எடுக்கக் கூடாது

வீடியோ எடுக்கக் கூடாது

வலிமை படம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், அதன் காட்சிகளை எப்படி ரசிகர்கள் செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து இப்படி ஷேர் செய்கின்றனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், அந்த வீடியோவை டெலிட் செய்யும் படியும் வைரலாக ஷேர் செய்யக் கூடாது என்றும் அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X