Don't Miss!
- News
தமிழக மக்களிளிடமிருந்து அன்புடன்! நிவாரண பொருட்களுடன் பாய்ந்த ’டான் பின்’! வழியனுப்பி வைத்த முதல்வர்
- Finance
மார்ச் காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது..!
- Sports
சிஎஸ்கேவுக்கு எதிராக செய்யனுமா? முடியவே முடியாது..! கிறிஸ் கெயிலிடம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்
- Automobiles
ஒரு சில ஊர்ல கன்னாபின்னானு ஓட்றாங்க... எந்த நகரில் நல்ல கார் டிரைவர்கள் அதிகம் இருக்கறாங்க தெரியுமா?
- Technology
விவோ ஒய்75 4ஜி விரைவில் இந்தியாவில் அறிமுகம்: 44 எம்பி செல்பி கேமரா அம்சம்., பட்ஜெட் விலை!
- Lifestyle
வெங்காய சட்னி
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அஜித்தின் ஏகே 61 ரிலீஸ் தேதியே கன்ஃபார்ம் பண்ணிட்டாங்களா? ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கு!
சென்னை: கடந்த தீபாவளிக்கே வலிமை வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களை ஏமாற்றி விட்டோமே என நடிகர் அஜித் ரொம்பவே ஃபீல் செய்துள்ளாராம்.
விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என கடந்த 2019ம் ஆண்டு டபுள் ட்ரீட் கொடுத்ததை போலவே இந்த ஆண்டும் டபுள் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம் நடிகர் அஜித்.
வலிமை படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு அதுவும் அந்த பெரிய பண்டிகையிலேயே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அசர வைக்கும் ஏகே 61 அப்டேட்கள்...ட்விட்டரை தெறிக்க விடும் அஜித் ரசிகர்கள்

டபுள் ட்ரீட்
கடந்த 2019ம் ஆண்டு பொங்கலுக்கு விஸ்வாசம் திரைப்படத்தையும் ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட பார்வை படத்தையும் கொடுத்து ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நடிகர் அஜித். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படியொரு டபுள் ட்ரீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

அந்த திருஷ்டிதான்
அந்த திருஷ்டி காரணமாகவோ என்னவோ தெரியவில்லை கடந்த 2020ம் ஆண்டு மற்றும் கடந்த 2021ம் ஆண்டு என இரண்டு ஆண்டுகளாக நடிகர் அஜித்தின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. வலிமை படம் கடந்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பொங்கலுக்கு கூட ரிலீஸ் ஆக முடியாத சூழல் உருவாகி விட்டது.

மார்ச்சில் ரிலீஸ்
கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிப்ரவரி மாதமும் எந்தவொரு பெரிய படங்களும் திரையரங்குகளில் வெளியாகாது என்பது உறுதியாகி உள்ளது. பெரிய தொகையுடன் வந்த ஒடிடி வாய்ப்பையும் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்காக நிராகரித்து விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், வரும் மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் வலிமை படத்தை முதல் படமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏகே 61 ஷூட்டிங்
அதே நேரத்தில் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்தை இயக்க காத்திருக்கும் இயக்குநர் எச். வினோத் இப்பவே ராமோஜி ராவ் படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகளை ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் மார்ச் மாதம் எளிமையான பூஜையுடன் படப்பிடிப்பு அங்கே தொடங்கும் எனக் கூறுகின்றனர்.

பீஸ்ட் ஹீரோயினா?
மேலும், தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் பூஜா ஹெக்டே இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ஷேடில் மிரட்டப் போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

2022 தீபாவளி
குறைந்த நாட்களில் படத்தை எடுத்து முடிக்கவே இயக்குநர் எச். வினோத்துக்கு நடிகர் அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் வெறும் 3 மாதங்களில் மொத்த படமும் தயாராகி இந்த ஆண்டு தீபாவளிக்கே ஏகே 61 படமும் வெளியாகும் என தற்போது ஹாட்டான அப்டேட்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கும் அழகான தமிழ் தலைப்பையே இயக்குநர் எச். வினோத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.