அஜித்தோட படத்துக்கு இதுதான் டைட்டிலா.. முதலெழுத்து வி-யை மட்டும் விட மாட்டேங்குறாரு!

சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது.

படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் படத்தின் சூட்டிங் செப்டம்பர் மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதை தொடர்ந்தே படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்களை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார் சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அவரது சமீபத்திய படம் வலிமை கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் மிரட்டியது. தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய படங்களின் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது 3வது முறையாக இணைந்துள்ளார் அஜித்.

ஐதராபாத் சூட்டிங்

ஐதராபாத் சூட்டிங்

ஏகே61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் அமைக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து படக்குழு கொஞ்சம் இடைவெளி எடுத்துக் கொண்ட நிலையில், அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் சூட்டிங் நடத்தப்பட்டது.

பாங்காக்கில் இறுதிக்கட்ட சூட்டிங்

பாங்காக்கில் இறுதிக்கட்ட சூட்டிங்

இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட மற்றும் இறுதிக்கட்ட சூட்டிங் பாங்காக்கில் நடத்தப்பட உள்ளதாகவும் இதற்காக செப்டம்பர் 2வது வாரத்தில் படக்குழு பாங்காக் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியள்ளன. பாங்காக்கில் 21 நாட்கள் தொடர்ச்சியாக சூட்டிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இரு வேடங்களில் அஜித்

இரு வேடங்களில் அஜித்

படத்தின் சூட்டிங் செப்டம்பர் இறுதியில் நிறைவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் அஜித் புதிய கெட்டப்பில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஹீரோவும் நானே, வில்லனும் நானே என்ற வகையில் இரண்டு வேடங்களில் அஜித் நடிக்கவுள்ளார்.

பொங்கலுக்கு ரிலீஸ்?

பொங்கலுக்கு ரிலீஸ்?

முன்னதாக தீபாவளிக்கு ஏகே61 படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படம் பொங்கல் ரிலீசாக மாஸ் காட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் சூட்டிங்கை நிறைவு செய்து அடுத்தடுத்து டைட்டில், டீசர், பாடல்கள், ட்ரெயிலர் குறித்த படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டைட்டில் வல்லமை?

படத்தின் டைட்டில் வல்லமை?

படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு வல்லமை என்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எப்போதுமே வி என்ற எழுத்தில் துவங்கும் அஜித்தின் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து வருகிறது.

வி எழுத்து சென்டிமெண்ட்

வி எழுத்து சென்டிமெண்ட்

இந்த டைட்டில் சென்டிமெண்ட் அவருக்கு வாலி படத்திலிருந்தே துவங்கிவிட்டது. தொடர்ந்து விஸ்வாசம், வலிமை, வரலாறு, வில்லன், வேதாளம், வீரம் என வி எழுத்தும் அஜித்துடனே தொடர்ந்து பயணித்து வருகிறது. அந்த ராசியின் அடிப்படையில் தற்போது வல்லமை என்ற டைட்டில் ஏகே61 படத்திற்கு வைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X