twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் அதிரடி மாற்றம்..இன்னும் 30% ஷூட்டிங் பாக்கி.. பொங்கலுக்கு ரிலீஸாகிறது அஜித்தின் வலிமை?

    By
    |

    சென்னை: அஜித் நடிக்கும் வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    Recommended Video

    Shocking! Why Ajith avoids crowd | Alisha Abdullah

    கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    இருந்தாலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    தலை நிறைய மல்லி பூ.. கழுத்து நிறைய செயின்.. பளபள மெரூன் டாப்ஸ்.. இதுல உம்மா வேற.. யார் இந்த நடிகை!தலை நிறைய மல்லி பூ.. கழுத்து நிறைய செயின்.. பளபள மெரூன் டாப்ஸ்.. இதுல உம்மா வேற.. யார் இந்த நடிகை!

    கடுமையான பாதிப்பு

    கடுமையான பாதிப்பு

    இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8473 ஆக உயர்ந்துள்ளது. 273 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நாளை வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்னும் இந்த மாதம் முழுவதும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், மேலும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கூறப்படுகிறது.

    இயல்பு நிலை

    இயல்பு நிலை

    ஊரடங்கு காரணமாக, தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதனால் மொத்த சினிமா படங்களின் ரிலீஸும் திட்டமிட்டபடி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சில மாதங்களாகும். அப்போதும் மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பார்களா என்பது சந்தேகமே என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

    விஜய்யின் மாஸ்டர்

    விஜய்யின் மாஸ்டர்

    இதனால் பெரிய படங்களின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் மாஸ்டர் படம், தீபாவளிக்கு தள்ளிப் போகிறது. இதனால் தீபாவளி ரிலீஸுக்கு முடிவு செய்து வைக்கப்பட்டிருந்த அஜித்தின் வலிமை படம் பொங்கலுக்கு தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் இன்னும் 30 சதவிகித காட்சிகள் படமாக்கப்பட வேண்டும். இதில் வெளிநாட்டு ஷெட்யூல்களும் உள்ளன.

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கல் ரிலீஸ்

    கொரோனாவில் இருந்து சகஜ நிலைக்குத் திரும்பி, இந்தக் காட்சிகளை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடித்தாலும் உடனடியாக ரிலீஸ் செய்ய இயலாது. இதனால் இந்தப் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக இன்டஸ்ட்ரியில் கூறுகின்றனர். கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன அஜித்தின் விஸ்வாசம் மெகா ஹிட் ஆனதால் இதை சென்டிமென்ட்டாகவும் பார்க்கின்றனர். ஆனால், இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.

    ஹூமா குரேஸி

    ஹூமா குரேஸி

    அஜித்தின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார்.

    English summary
    Due to the Coronavirus, the shooting of 'Valimai' has been delayed. So, the team is reportedly planning to take more time for the shooting of the film and to release the film in January 2021 during the Pongal festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X