என்ன சொல்றீங்க.. வலிமை பைக் ஸ்டன்ட்டுகளை பண்ணது இவர் தானா.. சோஷியல் மீடியாவில் கிளம்பிய புயல்!

சென்னை: வலிமை படத்தின் காட்சிகள் ஆங்கில படங்களில் இருந்து அப்படியே உருவி எடுக்கப்பட்டுள்ளதாக ஏகப்பட்ட புகார்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் அஜித்துக்கு பதிலாக பல ஸ்டன்ட்டுகளை செய்தது இவர் தான் என புதிய வீடியோக்களுடன் நெட்டிசன்கள் போட்டு வரும் பதிவு சமூக வலைதளங்களில் புயலை கிளப்பி உள்ளது.

மேலும், அந்த நபரின் இன்ஸ்டா பக்கம் முழுக்க வலிமை படத்திற்கு செய்த பைக் ஸ்டன்ட் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.

பைக் ஸ்டன்ட்டுகள் தான்

பைக் ஸ்டன்ட்டுகள் தான்

இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் முழுக்கவே பைக் ஸ்டன்ட்டுகள் தான் ஹைலைட். உலகத்தர பைக் ஸ்டன்ட்டு காட்சிகளை ஸ்டன்ட் இயக்குநர் திலீப் சுப்புராயன் வடிவமைத்து இருந்தார். படம் வெளியான பிறகு அதற்காக பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களையும் பெற்றார்.

அஜித்துக்கு விபத்து

அஜித்துக்கு விபத்து

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது ரிஸ்க்கான ஒரு ஸ்டன்ட் சீனில் நடிக்கும் போது நடிகர் அஜித் கீழே விழுந்ததில் அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியான போதே ரசிகர்கள் பதறிப் போனார்கள். ரிலீசுக்கு முன்பாக அந்த காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தனர்.

அஜித்துக்கு டூப்

அஜித்துக்கு டூப்

நடிகர் அஜித் டூப்பை விரும்ப மாட்டார் என்றும், அனைத்து பைக் ஸ்டன்ட்டுகளையும் அவரே கஷ்டப்பட்டு செய்தார் என இயக்குநர் எச் வினோத் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் பல பேட்டிகளில் கூறினர். ஆனால், வலிமை படத்தின் பல முக்கிய ஸ்டண்ட் காட்சிகளுக்கு அஜித்துக்கு விஷால் ஸாண்டர் என்பவர் தான் டூப் போட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் புயலே அடித்துள்ளது.

விஷால் ஸாண்டர்

விஷால் ஸாண்டர்

இன்ஸ்டாகிராமில் 𝙑𝙄𝙎𝙃𝘼𝙇 𝙓𝘼𝙉𝘿𝙀𝙍 எனும் பெயரில் இருக்கும் விஷால் தான் ஏகப்பட்ட ரிஸ்க்கான காட்சிகளுக்கு நடிகர் அஜித்துக்கு டூப் போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ரசிகர் ஒருவரின் கேள்விக்கும் அவர் ஆமாம் ப்ரோ.. அந்த காட்சிகளை நான் தான் பண்ணேன் எனக் கூறியுள்ள ஸ்க்ரீன் ஷாட்டுகளும் வைரலாகி வருகின்றன.

ஒரு சீனில்

ஒரு சீனில்

இந்த விஷால் ஸாண்டர் தான் ஒரு சீனில் அஜித்துக்கு பதிலாக பைக் ஓட்டுவது போல வில்லன் கார்த்திகேயாவை ஏமாற்றுவார். அந்த காட்சியில் நடித்ததைத் தான் அவர் சொல்கிறாரா? அல்லது வில்லனை ஏமாற்றியதை போல ஒட்டுமொத்த ரசிகர்களையும் இவர் ஸ்டன்ட்டை வைத்து இயக்குநர் ஏமாற்றி விட்டாரா? எனும் குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். அஜித் ரசிகர்கள், அனைத்து ஸ்டன்ட்டுகளையும் அஜித் தான் செய்தார் என்பதில் உறுதியாக உள்ளனர். முன்னதாக மங்காத்தா ஸ்டன்ட் காட்சியையும் வேறு சில பைக் ரைடர்கள் தான் செய்ததாக பேட்டிகள் எல்லாம் வெளியாகி பெரும் பிரச்சனை கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X