இது என்னடா சோதனை.. பொங்கலுக்கு ’அண்ணாத்த’ வரமாட்டார் போல.. ஷூட்டிங்கே இனி 2021ல தானாம்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' பொங்கலுக்கு வெளியாகாது என்ற தகவல் வைரலாகி வருகிறது.
Recommended Video
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'.
தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை இயக்கி கடந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார்

பொங்கல் ரிலீஸ்
இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் ரிலீசாகும், தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் செய்யப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழு தரப்பு சமீபத்தில் அறிவித்து இருந்ததது.

ஷூட்டிங்கே அடுத்த ஆண்டு தானாம்
இந்நிலையில், ‘அண்ணாத்த' படம் குறித்த தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதி வரை ‘அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங் நடக்காது என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலைமை கட்டுக்குள் வந்தால் மட்டுமே ஷூட்டிங் என்ற தகவல் பரவி வருகிறது.

ரஜினியின் கோரிக்கை
படக்குழுவினரின் பாதுகாப்பு கருதி, இந்த ஆண்டு இறுதி வரை 'அண்ணாத்த' படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங்கை நடத்த வேண்டாம் என்ற கோரிக்கையை தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸுக்கு நடிகர் ரஜினிகாந்தே வைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சம்மர்
அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கினாலும், அந்த படத்தை சம்மர் ரிலீசாக தான் வெளியிட முடியும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் அஜித்தின் வலிமை பட ஷூட்டிங்கும் அடுத்த ஆண்டு தான் தொடங்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











