ஒருவழியா வலிமை ஃபஸ்ட்லுக் வருது... என்ன ஸ்பெஷல் இருக்கு தெரியுமா ?

சென்னை : வலிமை அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் வெறுத்து போய் விட்டார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை படத்தின் ஃபஸ்ட்லுக் கூட வெளியிடவில்லை. அவ்வப்போது தயாரிப்பாளர் போனி கபூர் தான் ஏதாவது அறிவிப்பு வெளியிட்டு வந்தார். இப்போ அவரையும் காணோம்.

இருந்தாலும் தல ரசிகர்கள் விடுவதாக தெரியவில்லை. தொடர்ந்து அப்டேட் கேட்டு வருகின்றனர். இதனால் ஒரு வழியாக ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிட உள்ளதாக தகவல் பரவியது. படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே இதை உண்மை என நம்பி ட்விட்டரில் வலிமை மோஷன் போஸ்டர் என்ற ஹேஷ்டாக் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.

மியூசிக் தயார் செய்த யுவன்

மியூசிக் தயார் செய்த யுவன்

மார்ச் மாதமே மோஷன் போஸ்ட் மியூசிக்கை தான் ரெடி செய்து விட்டதாக யுவன்சங்கர் ராஜா கூறினார். இந்த ஆண்டு ஏப்ரலில் ஃபஸ்ட்லுக் டிசைன் செய்து முடித்து விட்டதாக கூறினார்கள். மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாளன்று ஃபஸ்ட்லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தள்ளிப்போன ஃபஸ்ட்லுக்

தள்ளிப்போன ஃபஸ்ட்லுக்

ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை வந்து, பலர் உயிரிழந்ததால், சமூக அக்கறை கொண்ட அஜித், இப்படி சூழ்நிலையில் ஃபஸ்ட்லுக் கொண்டாட்டாங்கள் வேண்டாம் என்று கூறி விட்டார். இதனால் அதுவும் இல்லாமல் போனது. படத்தில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் விலகியதால் அந்த காட்சிகளை மீண்டும் எடுப்பதாக வேறு டைரக்டர் வினோத் கூறி இருந்தார்.

இரட்டை விருந்து காத்திருக்கு

இரட்டை விருந்து காத்திருக்கு

தற்போது நிலையை ஓரளவு சரியாகி விட்டதால் இதற்கு மேலும் ரசிகர்களை காக்க வைக்க வேண்டாம் என வலிமை படக்குழு நினைக்கிறது. நீண்ட காலமாக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம், இரட்டை விருந்து தர படக்குழு முடிவு செய்துள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோஷன் போஸ்டரும் வருது

மோஷன் போஸ்டரும் வருது

படத்தின் ஃபஸ்ட்லுக்குடன் சேர்த்து அதிரடி மோஷன் போஸ்டரையும் வெளியிட உள்ளனராம். ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இதனை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இது அஜித் ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய விருந்தாகும் என கூறுகிறார்கள்.

சர்ப்ரைசும் காத்திருக்கு

சர்ப்ரைசும் காத்திருக்கு

மற்றொரு சர்ப்ரைஸ் விருந்தாக இந்த போஸ்டர்களில் படத்தின் ரிலீஸ் தேதியும் இடம்பெற உள்ளதாம். இதனால் ஃபஸ்ட்லுக் வெளியிட்ட மிக குறுகிய நாட்களிலேயே படத்தையும் ரிலீஸ் செய்து விடுவார்கள் என கூறப்படுகிறது.

ஆகஸ்டில் வலிமை ரிலீசா

ஆகஸ்டில் வலிமை ரிலீசா

இதுவரை வெளியான சினிமா வட்டார தகவலின்படி ஜுலையில் ஃபஸ்ட்லுக் மற்றும் போஸ்டரும், அதே உற்சாகத்துடன் ஆகஸ்ட்டில் படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இதற்கான வேலைகளை படக்குழு ஏற்கனவே துவக்கி விட்டதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X