இயக்குநர் அறிவழகனோட ஜாய்ன் ஆகறாரா லேடி சூப்பர்ஸ்டார் -படக்குழு அப்டேட்

சென்னை : அருண் விஜய் நடிப்பில் பார்டர் படத்தை இயக்கியுள்ளார் ஈரம் பட இயக்குநர் அறிவழகன்

அடுத்ததாக அவர் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை நயன்தாராவுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து படக்குழு தற்போது அப்டேட் செய்துள்ளது.

ஈரம் பட இயக்குநர்

ஈரம் பட இயக்குநர்

இயக்குநர் ஷங்கரின் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருந்து அவரது தயாரிப்பில் ஈரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் அறிவழகன். முதல் படத்திலேயே பாராட்டுக்களை அள்ளியவர். அறிவழகன் தற்போது அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராணுவ அதிகாரி

ராணுவ அதிகாரி

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் ஸ்டெபி படேல், ரெஜினா காசெண்ட்ரா முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். முதல்முறையாக அருண் விஜய் இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். கொரோனா சூழல் ஓரளவிற்கு கட்டுக்குள் வரும் சூழலில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விக்னேஷ் இயக்கத்தில் நயன்

விக்னேஷ் இயக்கத்தில் நயன்

இந்நிலையில் அறிவழகன் அடுத்ததாக நடிகை நயன்தாராவுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோருடன் இணைந்து நயன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படக்குழு மறுப்பு

படக்குழு மறுப்பு

முக்கோண காதல் படமாக உருவாகிவரும் இந்த படத்தின் சூட்டிங் கொரோனா மற்றும் அதையொட்டிய லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவுடன் அறிவழகன் அடுத்த படத்திற்காக இணையவுள்ளதை படக்குழு மறுத்துள்ளது.

More from Filmibeat

Read more about: actress nayanthara
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X