twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அருவி' படம் காப்பியா..? - இந்தா கிளம்பிருச்சு பூதம்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடித்த 'அருவி' படம் ரசிகர்களின் நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

    திரையுலகினர், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது 'அருவி' திரைப்படம். படத்தின் இயக்குநர், நடிகர்களும் பாராட்டப்பட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், 'அருவி' படம் ஒரு எகிப்து படத்தின் காப்பி என குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. 'அஸ்மா' எனும் படத்தின் கதைக்களமும் அருவி படமும் ஒரே மாதிரி இருப்பதாகக் கூறப்படுகிறது.

    அஸ்மா படம்

    அரபு மொழியில் 2011-ல் வெளிவந்த எகிப்திய திரைப்படம் 'அஸ்மா'. இந்தப் படம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருத்தியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 'அருவி' படத்தின் களமும் கிட்டத்தட்ட அதே போன்றதுதான்.

    எய்ட்ஸ் பாதித்த பெண்

    எய்ட்ஸ் பாதித்த பெண்

    சலாமா எனும் இயக்குநர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட மனிதர்களைச் சந்தித்து இந்தப் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் நாயகியின் இளமைக்காலம் தொடங்கி படம் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

    ஆபரேஷன்

    ஆபரேஷன்

    'அஸ்மா' படத்தில் நாயகி தான் எய்ட்ஸ் நோயாளி என்பதை ரகசியமாகவே வைத்திருப்பாள். அவளுக்கு வேறு ஒரு ஆபரேஷன் செய்யவேண்டியிருக்கும். ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழையும்போதுதான் டாக்டரிடமே தனக்கு ஹெச்.ஐ.வி பாசிடிவ் இருப்பதை வெளிப்படுத்துவாள்.

    அது இல்லப்பா இது

    அது இல்லப்பா இது

    'அருவி' படத்தில் அருவிக்கு எய்ட்ஸ் இருப்பது அவளுடன் இருப்பவர்களுக்குத் தெரியும். கதைக்களம் மட்டும் ஒன்று போல இருந்தாலும், 'அருவி' படம் அப்பட்டமான காப்பி அல்ல. இயக்குநர் இன்ஸ்பையர் ஆகி எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

    உருவி எடுத்தது தானா

    "அடக் கடவுளே... அப்ப அருவி படமும் உருவி எடுத்தது தானா? ஆனாலும், அதை நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி நல்ல படமா தந்ததற்கு பாராட்டலாம்" என ஒருவர் கருத்து சொல்லியுள்ளார்.

    English summary
    In Arunprabhu Purushothaman's direction, Aditi Balan plays lead role in the film 'Aruvi' is running in the theaters with good response from the fans. In this case, the film 'Aruvi' has been accused of being an Egyptian film copy. The Egyptian film 'Asmaa' and 'Aruvi' is reportedly the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X