சி.எஸ்.கேவுக்கு விளையாடுங்க.. கிரிக்கெட் பேட்டுடன் அதுல்யா.. டிரெண்டாகும் #AthulyaRavi!

சென்னை: அதுல்யா ரவி நடிக்கும் படங்கள் ஓடுதோ இல்லையோ, அவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும், ட்விட்டரில் நல்லா டிரெண்டாகி ஓடுகிறது.

கிரிக்கெட் பேட்டுடன் அதுல்யா ரவி எடுத்துள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள், தற்போது ட்விட்டரில், #AthulyaRavi என்ற ஹாஷ்டேக்கில் வைரலாக டிரெண்டாகி வருகிறது.

ஞாயிற்றுக் கிழமை அதுவுமா, அதுல்யவின் ரசிகர்கள், ஒன்றுக்கூடி, இப்படி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

டிரெண்டாகும் அதுல்யா

சன் டே ஸ்பெஷலாக நடிகை அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. பிரபல நடிகைகளே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டாலே, டிரெண்டாகாத நிலையில், அதுல்யா ரவியின் ஆர்மி இப்படி ஒரு டிரெண்டிங்கை சாத்தியம் ஆக்கி வருகிறது.

உண்மையா இருங்க

உண்மையா இருங்க

மேலும், தனது புதிய போட்டோஷுட் புகைப்படங்களுடன், உண்மையா இருங்க, நேர்மையா இருங்க, பாசிட்டிவா திங்க் பண்ணுங்க, ஹேப்பி சன் டே ஸ்வீட் ஹார்ட்ஸ் என வீக்கெண்ட் ஸ்பெஷலாக பிங்க் நிற சுடிதாரில் கலக்கலாக, கலர்ஃபுல்லாக அதுல்யா பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

உலக கோப்பை

கிரிக்கெட் பேட்டுடன் நடிகை அதுல்யா ரவி கொடுத்துள்ள போஸ் தான் தற்போது, இப்படியொரு வைரலாக காரணம். அவரது அந்த புகைப்படத்திற்கு தான் ஏகப்பட்ட லைக்குகளும், கமெண்ட்டுகளும் குவிகின்றன. "உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கோவையை சேர்ந்த அதுல்யா ரவி இடம்பெற்றதற்கு நாமும் வாழ்த்தலமே" என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

மேக்கப் ஏன்?

சன் டே ஸ்பெஷலா கேசுவலா போட்டோ போடுறாங்களாம்.. அப்புறம் ஏன் மேக்கப் போட்டுருக்கீங்க என இந்த நெட்டிசன் பங்கமாக கேள்வி எழுப்பி கலாய்த்துள்ளார். அதுல்யா ரவியின் இந்த புகைப்படங்களை பார்த்த, நெட்டிசன்கள், ஒண்ணு ஸ்கூட்டில நின்னு போஸ் கொடுக்குற, இல்லை, சைக்கிள்ல நின்னு என்றும் கழுவி ஊற்றியுள்ளனர்.

சி.எஸ்.கே

ஐபிஎல் சீசன் நெருங்கி உள்ள நிலையில், இப்படி பேட் வைத்த படி போட்டோஷூட் நடத்தியுள்ள அதுல்யா ரவியின், புகைப்படங்களை பகிர்ந்த சினிமா டிராக்கர் ரமேஷ் பாலா, சி.எஸ்.கே அணிக்காக பயிற்சி செய்றாங்க என கிண்டல் அடித்து கமெண்ட் செய்துள்ளார். அதையும் அதுல்யா லைக் செய்துள்ளார்.

நேச்சுரல் பியூட்டி

கோவையை சேர்ந்த தமிழ் பொண்ணு அதுல்யா ரவி, காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ஏமாளி, அடுத்த சாட்டை, கேப்மாரி மற்றும் நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X