இதுவும் உல்டா கதைதானாமே.. 2 வேடத்தில் ஷாருக் கான்.. இயக்குனர் அட்லி சம்பளம் இவ்ளோ கோடியா?

By

சென்னை: அட்லி இயக்கும் அடுத்தப் படத்தின் கதையும் பழைய தமிழ்ப்படம் ஒன்றின் உல்டா தான் என்று கூறப்படுகிறது.

Recommended Video

Shahrukh Khan Banglow Covered with Plastic

ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

அந்தப் படத்துக்குப் பிறகு, விஜய் நடிப்பில் தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்தார்.

படங்களின் உல்டா

படங்களின் உல்டா

இந்தப் படங்கள் அனைத்துமே, பழைய தமிழ்ப்படங்களின் உல்டா என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அடுத்து ஷாருக் கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்கப் போவதாக கடந்த சில மாதங்களாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கான வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஸீரோவுக்கு பிறகு

ஸீரோவுக்கு பிறகு

இந்நிலையில், நடிகர் ஷாருக்கானும் ஸீரோ படத்துக்கு பிறகு வேறு படங்களில் நடிக்காமல் இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிலீஸ் ஆன இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை தராததால், அடுத்தப் படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை. அடுத்த படத்துக்காக, பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டார். ஆனால், எதையும் ஓகே செய்யவில்லை.

போலீஸ்-கிரிமினல்

போலீஸ்-கிரிமினல்

இந்நிலையில் அட்லி இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான், இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார். ஒருவர் அப்பா. போலீஸ் அதிகாரி கேரக்டராம் இவருக்கு. இன்னொருவர் மகன். பக்கா கிரிமினல் கேரக்டராம். அப்பாவுக்கும் மகனுக்குமான ஆடுபுலி ஆட்டம்தான் படத்தின் கதை என்கிறார்கள்.

தங்கப் பதக்கம்

தங்கப் பதக்கம்

சிவாஜி நடித்த தங்கப் பதக்கம் உள்பட பல தமிழ்ப் படங்கள், இதே போன்ற கதையில் உருவாகி இருக்கின்றன. அதைதான் அவர் உல்டா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் திரைக்கதையில் புதிய விஷயங்களை, அட்லி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் இந்தப் படமும் அசத்தும் என்று நம்புகிறார்கள் ரசிகர்கள்.

உல்டா வகைதான்

உல்டா வகைதான்

இதற்கு முன் அட்லி இயக்கிய படங்கள் அனைத்தும் பழைய தமிழ்ப் படங்களின் உல்டா என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படமும் அதே உல்டா வகைதான் என்று கூறி வருகின்றனர், சினிமாவில். அட்லியின் குரு ஷங்கர், ஷாருக்கானை இயக்க நினைத்தார் ரோபோ படத்தில். எல்லாம் முடிவான நிலையில் டிராப் ஆனது, அந்தத் திட்டம்.

அட்லிக்கான சம்பளம்

அட்லிக்கான சம்பளம்

இப்போது அவர் சிஷ்யர், ஷாருக் கானை இயக்க இருக்கிறார். இந்த படத்துக்காக, இயக்குனர் அட்லிக்கான சம்பளம் ரூ.43 கோடி என்கிறார்கள். ஏப்ரலில் ஷூட்டிங் தொடங்குகிறதாம். ஷாருக்கின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போது இல்லை. பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம், முன் தயாரிப்பு பணிகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X