twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி 2 - சேலம் ஏரியாவில் நஷ்டமாம்.. எப்படி தெரியுமா?

    By Shankar
    |

    உலகம் முழுமையும் 'பாகுபலி' இந்தியப் படங்கள் செய்த வசூலை முறியடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் என அந்தந்த மொழி படங்கள் முதல் மூன்று நாட்கள் செய்த வசூலை ஓவர்டேக் செய்து உச்சத்துக்கு சென்று விட்டது.

    தமிழ்நாட்டில் சேலம் விநியோக பகுதியில் 82 தியேட்டர்களில் பாகுபலி ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது. தொடக்க நாள் முதல் அனைத்து திரையரங்குகளும் அரங்கு நிறைந்த காட்சியாக ஓடினாலும் மொத்த வசூல் பிற ஏரியாக்களுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

    Is Baahubali 2 fails in Salem area?

    திருச்சி ஏரியாவில் 42 தியேட்டர்களில் பாகுபலி திரையிடப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் மொத்த வசூல் 5.10 கோடி. சேலத்தில் 82 தியேட்டர்களில் பாகுபலி நான்கு நாட்கள் மொத்த வசூல் 4 கோடி என கணக்குக் காட்டுகிறார்கள். திருச்சி - சேலம் இரண்டு ஏரியா வசூலில் அதிகபட்சம் 10% வித்தியாசம் என்பது இயல்பானது.. ஒரு கோடி என்பது அநியாயமானது என்கின்றனர் விபரமறிந்த விநியோகஸ்தர்கள்.

    சேலம் நகரத்தை தவிர்த்து பெரும்பான்மையான ஊர்களில் உள்குத்து இங்கு சர்வ சாதாரணமானது. லோக்கல் ஆட்கள் படம் வாங்கினாலே இந்த நிலைமை. பாகுபலி படம் வாங்கி ரிலீஸ் செய்திருப்பது திருச்சி ஏரியா விநியோகஸ்தர் சுப்பு. இவருக்காக இங்கு தியேட்டர் ஒப்பந்தம் போட்டிருப்பவர் சிவா என்கிற லோக்கல் டிஸ்ட்ரிபியூட்டர். இவருக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மறைமுக ஒப்பந்தம் உண்டு. இவர் கொடுக்கிற கணக்குகளில் உண்மை எது பொய் எது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு பர்பக்ஷன் இருக்கும் கள்ளக் கணக்கில். இதை அனுபவரீதியாக உணர்ந்ததால்தான் இவருக்கு விநியோக அடிப்படையில் தயாரிப்பாளர்கள் படங்களை இப்போது தருவதில்லை என்கிறார் மீடியேட்டர் ஒருவர்.

    சேலம் ஏரியாவுக்கு படங்கள் வாங்கி ரீலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டாததற்கு மற்றுமொரு காரணம் தியேட்டர் சிண்டிகேட் அமைப்பு செய்யும் அராஜகம். இந்த அமைப்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் ஆதரவுடன் செயல்படுகிறது.
    இவர்கள் ஆத்தூர், தர்மபுரி, திருச்செங்கோடு உள்பட 23 மையங்களில் நடத்தும் தியேட்டர்களில் உண்மையான வசூல் விபரங்களை யாராலும் வாங்க முடிவதில்லை. அதையும் மீறிக் கேட்டால் படத்தை தியேட்டரில் இருந்து தூக்கி விடுவார்கள். தனி அரசாங்கம் போன்றே இவர்கள் நடவடிக்கை இருக்கும். டிக்கட் விலை இவர்கள் இஷ்டப்படிதான் விற்பார்கள், விநியோகஸ்தர்களுக்கு குறைவான விலையில் கணக்கு காட்டுவார்கள். சுமாரான படங்களுக்கே இந்த நிலை என்றால் கபாலிக்கு நடந்ததையெல்லாம் கற்பனை செய்து பாருங்கள்.

    இப்போது பிளாக்பஸ்டர் ஆகியுள்ள பாகுபலி படத்தில் ஏகத்துக்கும் கள்ளக் கணக்கு இருக்கும். அதனால்தான் சேலம் மொத்த வசூல் - திருச்சி மொத்த வசூலைவிட
    ஒரு கோடி வித்தியாசம் என்கிறார் சேலம் விநியோகஸ்தர் ஒருவர். வசூல் கணக்கு கேட்ட திருச்சி சுப்பு அலறியடித்து சேலம் வந்து உண்மை நிலை அறிய ஒவ்வொரு தியேட்டராகச் சென்றிருக்கிறார். பெரும்பான்மையான திரையரங்குகளில் கூறுகிற கணக்கிற்கும் - படம் பார்ப்பவர்களுக்கும் அவ்வளவு வேறுபாடு இருந்ததாம்.

    சேலம் திவ்யா திவ்யா தியேட்டரில் கையும் களவுமாக டிக்கட் வேறுபாட்டை சுப்பு கண்டுபிடித்து கூறியும் அந்த தியேட்டர் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க லோக்கல் விநியோகஸ்தர் முன்வரவில்லை. அவருடைய படமாக இருந்திருந்தால் தியேட்டருக்கு வழக்கம் போல ரெட் போட்டிருப்பார் என்கிறார் திருச்சி சுப்புவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர்.

    இந்த சம்பவங்களை ஒருங்கிணைத்து பார்க்கும் போது லோக்கல் விநியோகஸ்தருக்கும் - தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மறைமுக உடன்பாடு இருக்கும் என்பதால் மேற்கொண்டு முறையான கணக்குகளைப் பெறவும், திருட்டைத் தடுக்கவும் விநியோகஸ்தர்கள் சங்கத்தையும், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பையும் அணுக சுப்பு முயற்சி மேற்கொண்டுள்ளதாக நியாயமான கணக்கு தரும் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    முறையான கணக்குகளைக் கூட தராத, தர மறுக்கின்ற தருமபுரி DNC தியேட்டர்களிலிருந்து படத்தை தூக்கவும் சுப்பு தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது. உலகமே உற்சாகமாக பாகுபலி படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் தருணம் இது. 7 கோடி முதல் போட்டு பாகு பலி படம் வாங்கிய திருச்சி சுப்பு சோக கீதம் இசைப்பது எத்தனை பெரிய கொடுமை!

    தியேட்டர்கள் எப்போது நியாயமான கணக்குகளைக் காட்டி, உண்மையான வசூலைச் சொல்வார்களோ!

    - ஏகலைவன்

    English summary
    In Salem area, the theater owners are showing false collection details to the Baahubali 2 distributor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X