பாலாவின் வர்மா வெளியில் வருதாம்.. ஆனால் இங்கல்ல.. சிங்கப்பூரில்!
சென்னை : பாலா எடுத்த வர்மா படம் சிங்கப்பூரில் வெளியிட தயாராக உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாக இருந்த வர்மா படம் தயாரிப்பு தரப்பில் இருந்து நிராகரிக்க பட அந்த விசயம் சில மாதங்களுக்கு முன் சினிமா வட்டாரங்களில் மிக பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் வர்மா படத்தை இயக்கியது இயக்குனர் பாலா ஆகும்.

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவரின் படம் ஏன் தயாரிப்பு நிறுவனத்தால் நிராகரிக்க பட வேண்டும் என்ற பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஏற்பட்டது .
இதனையடுத்து தயாரிப்பு நிறுவனம் அர்ஜீன் ரெட்டி படத்தின் உதவி இயக்குனரை வைத்து வர்மாவை மீண்டும் ஆதித்யா வர்மா என்ற பெயரில் தயாரித்தது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல பாராட்டை பெற்றது. இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரமும் சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார். பல ரசிகர்களும் துருவ் விக்ரமுக்கு சரியான முதல் படம் என்பது போல வாழ்த்தியிருந்தனர் .

ஆனால் பல பாலா ரசிகர்களுக்கு பாலா எடுத்த விதம் மற்றும் பாலா எப்படி படத்தை இயக்கியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இன்று வரையில் இருப்பது உண்மை. இந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியுஸ் என்று கூட சொல்லலாம். ஏனெனில் பாலா எடுத்த வர்மா படம் சிங்கப்பூரில் வெளியிட ஆயத்தமாகி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
வர்மா படம் சிங்கப்பூரில் தணிக்கை குழுவுக்கு போட்டு காட்டப்பட்டு சான்றிதழ் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் 16 வயதிற்கு மேற்பட்டோர் படத்தை தாராளமாக பார்க்கலாம் என்ற ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறதாம். அப்போது படம் சிங்கப்பூரில் வெளியானால் அதிகாரபூர்வ இணையதளங்களிலும் வெளியாக வாய்ப்புகள் உண்டு. இதனால் கூடிய விரைவில் பாலாவின் கட் ரசிகர்களை வந்தடையும் என்பது தான் இப்போதைய இனிப்பான தகவல்.


Click it and Unblock the Notifications











