என்ன இப்படி ஆகிப் போச்சு.. இந்த பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பியா பீஸ்ட்? வைரலாகும் தகவல்!
சென்னை: கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு வந்த அதே சிக்கல் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கும் எழுந்துள்ளது.
Recommended Video
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி உள்ள டாக்டர் படத்தின் கதையும் பல படங்களில் வந்த கதை தான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் குறித்து அந்த படத்தில் நடித்து வரும் துணை நடிகர் ஒருவர் சொன்ன தகவல் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ரீமேக் படங்கள்
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான விஜய் மகேஷ் பாபுவின் சில படங்களை ரீமேக் செய்து நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். சமீப காலமாக ரீமேக் படங்களில் நடிக்க வில்லை என்றாலும் அவர் நடித்து வரும் பல படங்கள் மற்ற படங்களில் சாயலில் இருப்பதாகவும் துணை இயக்குநர்களின் கதைகளை திருடப்பட்டு எடுக்கப்பட்டதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன.

காப்பி குற்றச்சாட்டு
அதே போல இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களிலும் ஏகப்பட்ட படங்களின் காப்பி இருப்பதாக குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன் வைக்கப்பட்டன. ஆனால், இயக்குநர் அட்லியோ தான் பார்த்த 2000 படங்களில் இருந்து தான் இன்ஸ்பிரேஷன் ஆகி படங்களை தொடர்ந்து இயக்கி வருவதாகவும் பதில் அளித்திருந்தார்.

கோலமாவு கோகிலா சர்ச்சை
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற We Are The Millers எனும் பிரபல ஹாலிவுட்டின் காப்பி என்கிற குற்றச்சாட்டும் இரு கதைகளும் ஒன்று தான் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஏகப்பட்ட கதை ஒப்பீட்டுடன் குற்றம் சாட்டி இருந்தனர்.

டாக்டர் கதையும்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அந்த டிரைலரை பார்த்தால் அப்படியே கோலமாவு கோகிலா 2 போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை, அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்யாவின் டெடி படங்களில் சொல்லப் பட்ட உடல் உறுப்பு கடத்தல் பிரச்சனையையும் கையாண்டு இருப்பதையும் கிண்டல் செய்து வருகின்றனர்.

பீஸ்ட் இந்த படத்தின் காப்பியா
இந்நிலையில், யோகி பாபு நடிப்பில் வெளியான கூர்கா படம் போலவே பீஸ்ட் படம் இருப்பதாக துணை நடிகர் ஒருவர் புலம்பியது சமூக வலைதளங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும், யோகி பாபுவின் கூர்கா திரைப்படம் ஹாலிவுட் படமான Mall Cop திரைப்படத்தில் இருந்து சுட்ட படம் என்றும் பீஸ்ட் படமும் அதே படத்தின் காப்பியா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மால் செட்டப்
ஏற்கனவே பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட்டப்பில் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், ஒருவேளை நம்ம அய்யாச்சாமியா இருக்குமோ என நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.

டெல்லி மாலில் விஜய்
மேலும், சமீபத்தில் டெல்லியில் உள்ள பிரபல மாலில் நடிகர் விஜய் நடந்து சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. எல்லாமே ஒரே மால் மயமாக இருப்பதால், பீஸ்ட் படம் வெளியானதும் இந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்குமான விடை கிடைத்து விடும்.

எப்படியும் ஹிட் தான்
கதை எப்படி இருந்தாலும், எந்த படத்தின் இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும் பார்க்க மிரட்டலாக இருந்தால் தளபதி ரசிகர்கள் படத்தை பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கி விடுவார்கள் என்பது தான் பல வருடங்களாக கோலிவுட் பார்த்து வரும் நிதர்சனமான உண்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











