அனிமேஷன் சாதனை: கோச்சடையானை முந்துகிறதா அமிதாப்பின் படம்?
கறுப்பு வெள்ளையில் ஆரம்பித்து அனிமேஷன் காலம் வரை அத்தனை வடிவங்களிலும் நடித்தவர் என்ற பெருமையை ரஜினி மட்டுமே இன்றைக்குப் பெற்றுள்ளார்.
ஆனால் கோச்சடையான் வெளியாகத் தாமதமானால் அந்தப் பெருமை அமிதாப்பச்சனுக்குப் போய்விடும் என்கிறார்கள்.

கறுப்பு வெள்ளையில்...
கறுப்பு வெள்ளைப் படமான அபூர்வ ராகங்களில் அறிமுகமான ரஜினி, தொடர்ந்து சில கறுப்பு வெள்ளைப் படங்களில் நடித்த பிறகுதான் வண்ணப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்து சிவாஜி 3டி மூலம் முப்பரிமாணத்தில் நடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்தப் படம் ரிலீசாகும்போது 2 டியாக வந்தாலும், பின்னர் முழுமையாக 3 டி ஆக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அரங்குகளில் வெளியிடப்பட்டது. இதுவே பெரிய சாதனைதான்.

கோச்சடையானில்
இப்போது வெளிவரப் போகும் கோச்சடையான் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் நேரடி 3டி படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் வெளியாகும் முதல் இந்தியப் படம் இது. உலகளவில் டின்டின், அவதாருக்குப் பிறகு வரும் மூன்றாவது படம்!

முதல் நடிகர்
இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தில் நடித்த முதல் ஹீரோ என்ற பெருமை ரஜினிக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, கறுப்பு வெள்ளையில் தொடங்கி, சினிமாவின் நான்கு வடிவ படங்களிலும் நடித்த ஹீரோவும் ரஜினி மட்டுமே.

அமிதாப் வர்றாரே...
ஆனால் இன்னும் கோச்சடையான் வெளியாகவில்லை. இந்த நிலையில் மஹாபாரத் என்ற படத்தை இந்தியில் உருவாக்கி வருகிறார்கள். இதில் வரும் பீஷ்மர் பாத்திரம் அமிதாப்பின் உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் அனிமேஷன் படம் மட்டுமே. அமிதாப்பை அந்த பாத்திரத்துக்கு குரல் கொடுக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

டிசம்பர் 25-ல்...
இந்தப் படத்தை வரும் டிசம்பர் 25-ல் வெளியிடவிருக்கிறார்கள். இத் திரைப்படத்திற்கு அமிதாப் குரல் கொடுப்பதாக இருந்தால் ரஜினிக்கு முன்பு (கோச்சடையான் ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ்) மூன்று பரிணாமங்களில் நடித்த பெருமை அமிதாப்புக்குத்தான் கிடைக்கும் என்று ஒரு சிலர் பேசி வருகின்றனர்.

அமிதாப் நடிக்கவே இல்லையே
ஆனால் இந்தப் படத்துக்காக அமிதாப் நடிக்கக் கூட இல்லை. ஒரு போஸ் கூட தரவில்லை. 'இந்த படத்தில் நடித்ததாக அமிதாப் பச்சன் கூட ஒப்புக்கொள்ளமாட்டார்.. எனவே அப்படி ஒரு பெருமையை அபகரிக்க நினைக்கும் அளவு அவர் அற்பமானவர் அல்ல.." என்கிறார்கள் அமிதாப்பை அறிந்தவர்கள்.
ஆனால் கோச்சடாயானில் ரஜினி நடித்துள்ளார். மோஷன் கேப்சரிங் காட்சிகள் தவிர, அவர் ஒரிஜினலாகத் தோன்றும் காட்சிகளும் உள்ளன!


Click it and Unblock the Notifications











