Bigg Boss Julie: பல சர்ச்சைகள்.. காதல் தோல்வி.. ஜூலியின் வருங்கால கணவர் இஸ்லாமியரா?
சென்னை: பிக் பாஸ் குறும்படம் என்ற உடன் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் ஜூலி தான். இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் எத்தனையோ குறும்படங்கள் போட்டு இருந்தாலும், அந்த குடும்படத்திற்கு ஈடாகாது. அதில் ஜூலியின் மொத்த வில்லத்தனமும் தெரிந்து இருக்கும். அந்த நிகழ்ச்சியில் பேசுபொருளான ஜூலியை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்தார்கள். தற்போது ஜூலிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ள மகிழ்ச்சியான செய்தியை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது தீவிரமாக குரல் கொடுத்து இணையதளத்தில் பிரபலமானார் ஜூலி. அதன் பிறகு ஜூலிக்கு பிக் பாஸ் வீட்டில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. முதல் வாரத்தில் மக்களிடம் அவருக்கு ஆதரவு இருந்தது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல ஓவியாவுடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கமல் குறும்படத்தை போட்டுக்காட்ட ஜூலியின் மொத்தமரியாதையும் போய், இணையத்தில் ரகிகர்கள் அவரை மோசமான வார்த்தையால் திட்டினார்கள்.

பிக் பாஸ் ஜூலி: இதனால் ஜூலி வெளியில் தலை காட்டவே முடியவில்லை, போகும் இடமெல்லாம் என்னை கடுமையாக விமர்சிக்கிறார்கள். என் பெயரை கெட்டுவிட்டது என பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கண்ணீர் மல்க பேசி இருந்தார். உண்மையில் நான் அப்படிப்பட்டவள் இல்லை, நான் யார் என்பதை நிரூபிப்பதற்காக தான் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன் என கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஜூலி பற்றி தாடி பாலாஜி பல விஷயத்தை கூறினார். ஜூலி பல குழந்தைகளை படிக்க வைத்து இருக்கிறார். ஒரு முறை ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக பணம் கேட்டபோது உடனே எடுத்து கொடுத்தவர் ஜூலி என்று புகழ்ந்து இருந்தார்.
காதலன் மீது புகார்: அதைத்தொடர்ந்து ஒரு சில சீரியல், படங்களில் நடித்து வந்த ஜூலி, மகளிர் காவல் நிலையத்தில் மனிஷ் என்பவர் மீது மோசடி புகார் அளித்தார். அதில், மனிஷை காதலித்தேன். இருவரும் நான்கு ஆண்டுகளாக மிக நெருக்கமாகக் காதலித்து வந்தோம். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறினார். அந்த நம்பிக்கையின் பெயரில், மனிஷுக்கு இருசக்கர வாகனம், இரண்டு சவரனில் தங்கச் செயின், பிரிட்ஜ் என இரண்டு லட்ச ரூபாய் வரை செலவுசெய்தேன். ஆனால் மனிஷ், என் மதத்தைக் காரணம் காட்டி காதலை முறித்துக்கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன்.
காதல் தோல்வி: என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஜூலி தான் மனீஷ் உடனான காதலை துண்டித்து அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். மனிஷ் தொடர்ந்து, ஜூலியிடம் பேசும்படி கெஞ்சி உள்ளார். அந்த தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் மனிஷ் மீது ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின் காவல் துறையினர் அறிவுரை கூறி கூறியதால், ஜூலி காதலன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்று இருக்கிறார்.
இஸ்லாமியரா?: தனது வாழ்க்கையில் அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய ஜூலி, தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த மகிழ்ச்சியான தகவலை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். தனது வருங்கால கணவர் யார் என்று காட்டாமல், என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் மனிதனை நான் கண்டுபிடித்து விட்டேன். நான் பிரார்த்தித்த அனைத்தும் அவன் தான் என பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்பட வீடியோவில் 'மெகஹரசைலா' பாடலை பின்னனி இசையாக அவர் வைத்திருக்கிறார். இதனால், ஜூலியின் வருங்கால கணவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. விரைவில் ஜூலிக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











