பிரியங்காவை காப்பாற்றி தாமரையை வெளியேற்ற போகிறார்களா? கொதிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்த வழங்கப் போகிறார்? இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்றைய முதல் புரமோவில் புதிதாக வீட்டுக்குள் நுழைந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் தாமரையை பற்றி தவறாக பேசியதை பார்த்ததும் ரசிகர்கள் தாமரைக்கு பிக் பாஸ் குழு கட்டம் கட்டி விட்டது என அதிருப்தி அடைய தொடங்கி விட்டனர்.

வாரத்தின் தொடக்கத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த பிரியங்கா அப்படியே காப்பாற்றப்படும் விதமாக இந்த வாரம் முழுக்க ஷோ அக்‌ஷராவை நோக்கி திரும்பவும் அதுதான் காரணமா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தாமரைக்கு தகுதியில்லை

தாமரைக்கு தகுதியில்லை

வீட்டில் அனைத்து வேலைகளும் தனியாளாக இழுத்துப் போட்டு செய்யும் தாமரை செல்விக்கு வீட்டின் தலைவராக தகுதியில்லை என பிரியங்கா பேசியது ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கியது. இந்த வாரம் பிரியங்காவை தான் வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என அவருக்கு எதிராக வாக்குகளை போட தொடங்கினர் ரசிகர்கள்.

அடங்காத மாணவி

அடங்காத மாணவி

அதே போல கண காணும் காலங்கள் டாஸ்க்கின் போது அடங்காத மாணவியாக முதல் நாளில் ஆர்ப்பாட்டம் செய்து பனிஷ்மென்ட் அனுபவித்த பிரியங்கா அப்படியே டோட்டலாக சேஞ்ச் ஆகி சமத்துப் பெண்ணாக மாறியது எப்படி என்கிற கேள்வியும் பிக் பாஸ் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

அக்‌ஷரா மீது ஃபோகஸ்

அக்‌ஷரா மீது ஃபோகஸ்

பிரியங்கா மீது இருந்த வெறுப்பை அப்படியே மறக்க செய்ய அக்‌ஷராவுக்கும் சிபிக்கும் இடையேயான சண்டையை மட்டுமே ஹைலைட் செய்து இந்த வாரத்தை அப்படியே ஓட்டிவிட்டனர். அக்‌ஷராவுக்கு பிக் பாஸ் என்ன அறிவுரை வழங்கினார் என்பதையும் காட்டாத நிலையில், பிரியங்காவை மறந்தே விட்டனர் ரசிகர்கள்.

சிறந்த மாணவி

சிறந்த மாணவி

அபிநய் மற்றும் தாமரை செல்விக்கு சிறந்த மாணவர் மற்றும் சிறந்த மாணவி விருது வழங்கப்பட்டது. ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை காட்டாமல் பிக் பாஸ் எடிட்டர் மறைத்து விட்டார். சிறந்த மாணவியாக விருது பெற்ற தாமரை செல்வி பிரியங்காவின் தலையை சீவி விடுவது போன்ற வேலைகளை செய்து வருவதை பார்த்த ரசிகர்கள் அந்த பிரச்சனை என்ன தான் ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

அபிஷேக் ராஜா, அமீர், சஞ்சீவ் என தொடர்ந்து ஆண் போட்டியாளர்களே வைல்டு கார்டு என்ட்ரியாக வருகின்றனர். பிக் பாஸ் டீச்சர்களாகவும் ஆண் போட்டியாளர்களாகவே உள்ளனர் என ரசிகர்கள் ஒரு பக்கம் அப்செட் ஆகி உள்ளனர். லோகோவில் மட்டும் பிங்க் டிசைன் போட்டு விட்டு பெண் போட்டியாளர்களையே தொடர்ந்து எவிக்ட் செய்து வருவது என்ன நியாயம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

கொளுத்திப்போட்ட அமீர்

கொளுத்திப்போட்ட அமீர்

கடைசியாக வந்த சஞ்சீவ் கூட சரவெடியாக பேசி விட்ட நிலையில், அவருக்கு முன்னதாக வந்த அமீர் ஏன் இன்னும் பேசவே இல்லை. அவருக்கு பேசத்தெரியுமா? தெரியாதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாகவும் தாமரைக்கு எதிராகவும் அவர் கொளுத்திப் போட்டதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

தாமரை தான் டார்கெட்

தாமரை தான் டார்கெட்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரை செல்வியை தான் வெளியேற்ற பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் பிரியங்காவின் அட்ராசிட்டிகளை அடக்கி வாசிக்க வைத்து அவருக்கு ஆதரவான அபிஷேக், அமீர் மற்றும் சஞ்சீவ் உள்ளிட்டோரை வீட்டுக்குள்ளே அனுப்பி இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X