என்ன ப்ளூ சட்டை மாறன் இப்படி இறங்கிட்டாரு.. ஒருவேளை ஐடியை யாராச்சும் ஹேக் பண்ணிட்டாங்களா?
சென்னை: பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் ட்விட்டர் பக்கத்தில் ஏகப்பட்ட புதிய ட்வீட்கள் சம்பந்தம் இல்லாமல் குவிந்து வருகின்றன.
யூடியூப் விமர்சன வீடியோவில் தான் அத்தனை விளம்பரங்களை போட்டு மனுஷன் சாவடிப்பாருன்னு பார்த்தா, இப்போ ட்விட்டர் பக்கத்தில் தல தளபதி போட்டோக்களை போட்டு புரமோஷன் செய்து வருகிறார்.
இதுவரை இதுபோன்ற ட்வீட்களை மாறனிடம் எதிர்பார்க்காத ரசிகர்கள் அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

ப்ளூ சட்டை மாறன்
தமிழ் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் விமர்சகர் இளமாறன் ஒரே கலர் சட்டையை அணிந்து விமர்சனம் செய்து வந்த நிலையில், அவரை ப்ளூ சட்டை மாறன் என ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். அவரும் அதே பெயரில் தனது ட்விட்டர் ஐடியை ஆரம்பித்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகிறார்.

கழுவி ஊற்றிவிடுவார்
படம் கொஞ்சம் சரியில்லை என்றாலும் மனுஷன் பாரபட்சமோ பச்சாதாபமோ பார்க்கவே மாட்டார் வச்சு விளாசி கழுவி ஊற்றிவிடுவார். அவரது அந்த ட்ரோல் விமர்சனத்தை கேட்கவே ஏகப்பட்ட சினிமா ரசிகர்கள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக டிரெண்டாகும் அவரது விமர்சனத்தை பார்த்து வருகின்றனர்.

ஏகப்பட்ட விளம்பரம்
யூடியூப் சேனலை யாராவது தர்மத்துக்கு நடத்துவார்களா? எல்லாமே ஒரு விளம்பரத்துக்காகத்தானே.. வருகிற எல்லா விளம்பரங்களையும் வாங்கி போட்டுக் கொண்டு விளம்பரத்தை பத்து நிமிஷமும் விமர்சனத்தை 2 நிமிஷத்தில் ஒரு பன்ச் போட்டு முடித்து விடுவார் மாறன்.

படத்தை தாண்டி
ஒரு படத்தை விமர்சனம் செய்ய ஆரம்பித்தால், அந்த படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் பெயர், ஊர், அந்த படத்தை தயாரித்தவர் முன் கதை என ஏகப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்களையும் வைத்து லைக்குகளையும், வியூக்களையும் அள்ளி குவித்து வருகிறார்.

இயக்குநர் அவதாரம்
சினிமா படங்களை விமர்சித்து வந்த ப்ளூசட்டை மாறன் நாமும் ஒரு படத்தை இயக்கி அரசாங்கத்தையும் கொஞ்சம் விமர்சிக்கலாமே என நினைத்து ஆண்டி இண்டியன் எனும் தலைப்பில் இயக்கிய படத்தை சென்சார் போர்டு மொத்தமாக தடை செய்துவிட்டது. மேல் முறையீடுகள் செய்தும் எந்தவொரு பலனும் இல்லை. ஒடிடியில் வெளியானால் தான் உண்டு என்றும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.

திடீர்னு என்ன ஆச்சு
சமீபத்தில் வெளியான நவரசா, நெற்றிக்கண் படங்களுக்கும் தனது ஸ்டைலில் விமர்சனத்தை பேசி அவரது ட்ராக் நல்லாதான் போய்க் கொண்டிருந்தது. திடீரென அவரது ட்விட்டர் பக்கத்தில் தல அஜித் பற்றிய ட்வீட்டும், நடிகர் விஜய்யின் போட்டோ ஒன்றும் சம்பந்தம் இல்லாமல் ஷேர் செய்யப்பட்டு இருக்கிறது.

ட்விட்டரிலும் விளம்பரமா
மணி ஹெய்ஸ்ட், அல்லு அர்ஜுனின் புஷ்பா உள்ளிட்ட பட போஸ்டர்களை சமீபத்தில் ட்வீட் போட்டு புரமோஷன் வேலைகளை ட்விட்டரிலும் ஆரம்பித்து இருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில், தல அஜித்தின் 100 மில்லியன் வியூஸ் கடந்த பாடல்கள் போஸ்ட் மற்றும் தளபதி விஜய் பைக் ஓட்டிக்கொண்டு வருவது போன்ற ஒரு போட்டோவையும் ஷேர் செய்திருப்பதை பார்த்த ரசிகர்கள் இங்கேயும் விளம்பரமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் சந்தேகம்
ப்ளூ சட்டை மாறனின் அந்த ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் இது உங்களுடைய அக்கவுண்ட் தானா? இதை நீங்க தான் பயன்படுத்துறீங்களா? இல்லை யாராச்சும் ஹேக் பண்ணிட்டாங்களா? என்றும் ரசிகர்கள் கேட்டு ட்ரோல் மீம்களையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.

அட்மின் பார்த்த வேலையா
ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டர் பக்கத்துக்கு அட்மின் யாரையாவது போட்டுள்ளாரா என்றும், புது அட்மின் பார்க்கும் வேலையா இது? என்றும் ஏகப்பட்ட கேள்விகள் அவரது ட்விட்டர் போஸ்ட்டுக்கு கீழே குவிந்து வருகின்றன. ஆனால், இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

எஸ் எஸ் மியூசிக் மாதிரி
நடிகர்கள் தொடர்பான போட்டோக்களை போட்டு புரமோஷன் வேலைகளை செய்து வரும் எஸ் எஸ் மியூசிக் மாதிரி ஆயிட்டான் என்றும், அண்ணனுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? யாருடா எங்க தலைவனோட அக்கவுன்ட்டையே ஹேக் பண்ணது என நெட்டிசன்கள் வரிந்து கட்டி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











