அட்லீ மீது கோபமடைந்தாரா ஷாருக்கான்.. காரணம் தெரியுமா?

மும்பை : நடிகர் ஷாருக்கான், நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் ஜவான். இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின்மூலம் அட்லீ பாலிவுட்டில் முதல்முறையாக களமிறங்கியுள்ளார். விஜய்யின் ஹாட்ரிக் படங்களின் வெற்றி அவருக்கு இந்தப் படத்தின் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

ஷாருக்கானின் பதான் படம் தற்போது 900 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ள நிலையில், ஜவான் படத்திற்கும் மிகச்சிறந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்ஷா என்று கொண்டாடப்படுபவர். 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 25ம் தேதி இவரது பதான் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தில் ஜான் ஆப்ரஹாம், சல்மான்கான் உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.

அதிரடி வசூல்

அதிரடி வசூல்

இந்தப் படம் தற்போது 900 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ள நிலையில், ஷாருக்கானின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஷாருக்கானுடன் ட்விட்டர் லைவில் பல்வேறு கேள்விகளை கேட்டு மகிழ்ந்துள்ளனர். நேரிலும் அவரது வீட்டின் வாயிலில் சென்று ஷாருக்கானை சந்தித்துள்ளனர்.

தூக்கி நிறுத்திய பதான்

தூக்கி நிறுத்திய பதான்

பதான் படம் பாலிவுட் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் பதான் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அட்லீ மீது ஷாருக்கான் கோபம்?

அட்லீ மீது ஷாருக்கான் கோபம்?

ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இதனிடையே இந்தப் படத்தின் பட்ஜெட்டை 14 கோடி ரூபாய்க்கு அட்லீ ஏற்றிவிட்டதாகவும் இதனால் ஷாருக்கான் அட்லீ மீது மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ சென்னை பயணம்

அட்லீ சென்னை பயணம்

இதனால் சூட்டிங்கை நிறுத்திவிட்டு 3 நாட்கள் பயணமாக இயக்குநர் அட்லீ சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அட்லீ -பிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக அட்லீ சென்னை வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X