இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போறது இவர் தானா? அதுக்குத்தான் கமல் அதை ஆரம்பித்தாரா?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போறது, கமல் சொன்ன அந்த போரிங் போட்டியாளர் தான் என ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி விட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை போட்டே சாதித்து விடலாம் என இருக்கும் இருவரில் ஒருவர் தான் சனம் ஷெட்டி.
போரிங் போட்டியாளர் யாரு என கமல் கேட்ட போது, வாலன்ட்டியராக தன்னைத் தானே கூறிக் கொண்டார் சனம் ஷெட்டி.
ஜித்தன் ரமேஷ் பாலாவை போரிங்னு சொல்லி நல்லாவே ஸ்கோர் பண்ணார்.

ஜித்தன் ரமேஷ் பளிச்
பாலாஜி முருகதாஸ் தான் சார் போரிங் போட்டியாளர், கடந்த இரண்டு வாரமாக மற்ற போட்டியாளர்களுடன் கலந்து கொள்ளாமல் தனியாக கேம் விளையாடி வருகிறான். அப்பா நான் எவ்வளவோ சொல்லியும், அந்த பத்திரத்தை என் கிட்ட கூட கொடுக்கலை, அப்பனாவே என்னை மதிக்கலை என செம ட்ரோல் செய்தார்.

ஒத்துக்காத பாலா
ஜித்தன் ரமேஷ் பாலாவை போரிங் போட்டியாளர் என சொன்னதும், மற்ற ஹவுஸ்மேட்கள் ரொம்பவே ஹேப்பி ஆனார்கள். ஆனாலும், பாலா அதை ஒத்துக்கவே இல்லை. லக்சரி பட்ஜெட் டாஸ்க்கை வச்சு மட்டும் சொல்லக் கூடாது. நான் விளையாடாமல் இல்லை. வேற மாதிரி விளையாடினேன் என பாலா வம்பு பண்ணினார்.

போரிங் போட்டியாளர் யார்?
பாலாஜி முருகதாஸ் வாதாடியதை ஏற்றுக் கொண்ட கமல், கேம் என்னன்னே தெரியலைன்னாலும், பாலா ஏதோ ஒரு கேம் ஆடினார். ஆனால், பார்ட்டிசிபேட்டே பண்ண மாட்டேன் என சொன்ன சனம் ஷெட்டி தான் கடந்த வாரத்தின் போரிங் போட்டியாளர் என பிக் பாஸ் பஞ்சாயத்து தலைவர் கமல் தீர்ப்பு வழங்கி விட்டார்.

இந்த வாரம் இவர் தானா?
இன்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் எவிக்ஷன் நாமினேஷன் செய்ய உள்ள நிலையில், சனம் ஷெட்டிக்கு போரிங் போட்டியாளர் என கமல் கொடுத்திருப்பது. அத்தனை பேரின் மனங்களிலும் இடம் பிடித்து இருக்கும். ஏகப்பட்ட பேர் சனம் ஷெட்டியை இன்று தேர்வு செய்தால், அவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என்றும் ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











