அர்ஜுனை பழிவாங்க ஸ்ருதியை பயன்படுத்துகிறாரா கன்னட நடிகர்?

By Siva

பெங்களூர்: ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் சேத்தன் கூறி தான் அர்ஜுனை பழிவாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ருதி ஹரிஹரன் புகார் தெரிவித்தார். இதை மறுத்து அர்ஜுன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் ஸ்ருதி அளித்த புகாரின்பேரில் போலீசார் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அர்ஜுன்

அர்ஜுன்

அர்ஜுனின் நெருங்கிய நண்பரான பிரசாந்த் சம்பர்கி கூறியதாவது, ஸ்ருதி ஹரிஹரன் சர்ச்சைக்கு பின்னால் இருப்பது நடிகர் சேத்தன் தான். அர்ஜுனின் படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்காக ஸ்ருதி மூலம் பழிதீர்க்கிறார் அவர். அர்ஜுன் கொடுத்த ரூ. 10 லட்சம் அட்வான்ஸை கூட திருப்பித் தர மறுத்துள்ளார் சேத்தன் என்றார் பிரசாந்த்.

சேத்தன்

சேத்தன்

நான் ஒன்றும் அர்ஜுனை பழிவாங்க எதுவும் செய்யவில்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள புகாரை கேட்டு மனமுடைந்து போயுள்ளேன். நான் அனைவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடுகிறேனே தவிர யாரையும் பழிவாங்கவில்லை. நான் நடத்தும் போராட்டத்திற்கு அரசியல், மதம் மற்றும் தனி விரோதம் போன்ற சாயங்களை பூசிவிட்டார்கள் என்று கூறி வருத்தப்பட்டுள்ளார் சேத்தன்.

சீனியர்

சீனியர்

அர்ஜுன் மீது நான் மூன்று ஆண்டுகளாக மரியாதை வைத்திருந்தேன். அவர் போய் சினிமா துறை பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டி போராட்டம் நடத்துபவர்களை அசிங்கப்படுத்த இந்த இளவுக்கு இறங்கி வந்துள்ளார் என்பது வேதனை அளிக்கிறது. தனக்கு நெருக்கமானவர்களை வைத்து இந்த போராட்டத்தை திசை திருப்புகிறார் என்று சேத்தன் தெரிவித்துள்ளார்.

ஹீரோ

ஹீரோ

2016ம் ஆண்டு மார்ச் மாதம் மாதம் அர்ஜுன் எனக்கு இமெயில் அனுப்பி புதுப்படம் பற்றி பேசினார். தன்னுடைய அடுத்த படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வைப்பதாக கூறினார். நானும் சம்மதம் தெரிவித்தேன். பின்னர் அந்த படத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன் என்று சேத்தன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X