சமீபத்தில் சமந்தா.. இப்போ தனுஷ்.. சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்ய காரணம் ஓவர் இன்டிமேசியா?

சென்னை: சினிமா பிரபலங்கள் இப்படி திடிரென விவாகரத்து அறிவிப்பதற்கு பின்னணியில் சினிமா இன்டிமேசி காட்சிகள் தான் அதிகளவில் காரணங்களாக இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இடையே ஏற்பட்ட விவாகரத்துக்கும் இது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு சினிமா எடுக்கணும் எனும் பெயரில் அதிகளவில் நெருக்கமான காட்சிகளும் லிப் லாக் காட்சிகளும் இடம்பெறுவது நடிகர்களின் குடும்ப வாழ்க்கையை பெரிதளவில் பாதிப்படைய செய்வதாக கூறுகின்றனர்.

சமந்தா விவாகரத்து

சமந்தா விவாகரத்து

டோலிவுட் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் இதே போலத்தான் ஒரே மாதிரியான அறிவிப்பை வெளியிட்டு தங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் படுக்கையறை காட்சிகளில் நடித்தது மற்றும் ஹாலிவுட் படத்தில் இருபாலின சேர்க்கையாளராக நடிக்க ஒப்புக் கொண்டது தான் அந்த பிரிவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஐட்டம் பாடல்

ஐட்டம் பாடல்

மேலும், நடிகை சமந்தாவின் அதீத கவர்ச்சி நடனத்தில் இடம்பெற்ற புஷ்பா படத்தின் ஓ சொல்றியா மாமா பாடல் வீடியோவும் நடிகர் நாக சைதன்யா குடும்பத்தை பெரிதளவில் பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த பாடலில் நடனமாட மறுத்த சமந்தாவை நடிகர் அல்லு அர்ஜுன் தான் சமாதானப்படுத்தி ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொடுத்து ஆட வைத்தார் என்றும் தகவல்கள் வைரலாகி வருகின்றன.

இன்டிமேசி காட்சிகள்

இன்டிமேசி காட்சிகள்

நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் என கருதப்படும் அதே இன்டிமேசி காட்சிகள் தான் நடிகர் தனுஷின் விவாகரத்துக்கும் காரணம் என கருதப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த '3' படத்திலேயே நடிகை ஸ்ருதிஹாசன் உடன் படு நெருக்கமாக தனுஷ் நடித்த போதே இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவானது. ஆனால், பேச்சுவார்த்தைகளின் மூலம் அது தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஹாலிவுட் படங்கள்

ஹாலிவுட் படங்கள்

நடிகை சமந்தாவுக்கு இங்கிலாந்து இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் விவாகரத்துக்கு காரணம் எனக் யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹாலிவுட்டில் நடித்து வருகிறார். மேலும், லிப் லாக் காட்சி, படுக்கையறை காட்சிகள் என நடிப்பின் உச்சத்துக்கு செல்வது குடும்ப உறவில் விரிசல் விழ வைப்பதாக கூறுகின்றனர்.

முத்தத்திற்கு சிஜி

முத்தத்திற்கு சிஜி

நடிகர் சல்மான் கான் இதுவரை லிப் லாக் முத்தம் கொடுத்து நடிக்க மாட்டேன் என்பதை இந்திய ரசிகர்களுக்காக ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறார். நடிகர் சூர்யா மாற்றான் படத்தில் காஜல் அகர்வாலுக்கு லிப் லாக் கொடுக்கும் காட்சிக்கு சிஜியை பயன்படுத்தியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பாடி டபுள்

பாடி டபுள்

இதே பிரச்சனை காரணமாகவே பல ஹாலிவுட் நடிகைகளே நிர்வாண காட்சிகளில் நடிக்க பாடி டபுள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் படத்தின் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நிர்வாணமாக இதுவரை நடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!
எல்லை மீறுகிறதா சினிமா

எல்லை மீறுகிறதா சினிமா

ரியாலிட்டி என்கிற பெயரில் பொழுதுபோக்கு அம்சமான சினிமா எல்லை மீறுவதே இதுபோன்ற நடிகர்களின் சொந்த வாழ்க்கை பாதிக்க பெரிய காரணமாக மாறிவருவதாக அதிர்ச்சியான ரிப்போர்ட்டுகள் வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகர்கள் அதிக நெருக்கமான காட்சிகளை தவிர்க்க காரணமும் இதுதான் எனக் கூறுகின்றனர். சிலர் சினிமா வேறு சொந்த வாழ்க்கை வேறு என புரிந்து கொண்டு வாழ்வதால் குடும்ப உறவில் விரிசல் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X