நீலாங்கரையில் இருந்து கோட்டைக்கு டிராஃபிக் ஜாம் ஆகுது.. போயஸ் கார்டன் வராரா CM விஜய்.. ரஜினிகாந்த்?
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டு, சட்டமன்றத்திற்கு முதல் நாள் சென்ற பின்னர், அடுத்த இரண்டு நாட்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் தொல் திருமாவளவன், அதிமுகவில் வேலுமணி அணியைச் சேர்ந்தவர்கள் பலரையும் சந்தித்தார். இப்படி இருக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க திட்டமிட்டார் என்றும், ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதைப் புறக்கணித்து விட்டார் என்றும் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்யாறு பாலு வெளியிட்டுள்ள வீடியோவில், " தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூத்த அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் ரஜினி அதை புறக்கணிக்க ரஜினி உடனே கிளம்பி சென்றுவிட்டார். பலரும் அவருக்கு விஜய் முதலமைச்சர் ஆனது பிடிக்கவில்லை, அதனால் தான் இமயமலைக்குச் சென்று குகையில் ஒரு 15 நாட்கள் வரை இருந்தால் தான் அவருக்கு மனம் சரியாகும் என்று கூறினார்கள்.

பெங்களூருவில் ரஜினி: ஆனால் அவர் பெங்களூருவில் உள்ள வாழும் கலை என்ற ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக தனது மனதில் இருந்த மிகப்பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்ற கர்வத்தை எல்லாம் உடைத்தது இந்த ஆசிரமம் தான் என்றும் கூறினார். இதை அவர் ஏன் கூறினார், இயல்பாகத்தான் பேசினாரா அல்லது உள்நோக்கம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.
தவிர்த்த ரஜினிகாந்த்: முதலமைச்சர் விஜய் உங்கள் வீட்டிற்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்று வாழ்த்தலாமே? ஆனால் அதைச் செய்வதை விட்டுவிட்டு அவரைப் புறக்கணிக்கிறார். விமான நிலையத்தில் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கூட முறையாக பதில் சொல்லவில்லை. விஜய் என்ன உங்க பகையாளியா? நீங்க பார்க்க வளர்ந்தவர் தானே? அப்படி இருக்கும் போது அவர் வீட்டிற்கு வருகிறார் எனும் போது அவரை வரவேற்று வாழ்த்தி இருக்கலாமே என்று கூறியுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

போயஸ் கார்டன்: அதேபோல் முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், பொது மக்களுக்கும் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பதால், முதலமைச்சர் விஜய் விரைவிலேயே தலைமைச் செயலகத்திற்கு அருகில் இருக்கும் ஏதாவது பகுதியில் குடியேற போகிறார் என்றும் கூறப்படுகிறது, அது பெரும்பாலும் போயஸ் கார்டன் பகுதியாகத்தான் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் பேச்சுகள் அதிகம் அடிபடுகிறது. அப்படி முதலமைச்சர் விஜய் போயஸ் கார்டன் பகுதிக்கு குடிபெயர்ந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதே பகுதியில் இருப்பாரா என்றும் பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications