பெரிய சர்ச்சையை கையில் எடுத்த மைக் மோகன்.. ஹரா படத்தின் போஸ்டரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

சென்னை: வெள்ளி விழா நாயகன், மைக் மோகன் என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மோகன் நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

1977ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மோகன்.

இவரை கோகிலா மோகன் என்றும் ஆரம்பத்தில் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூடு பனி மூலமாக

மூடு பனி மூலமாக

கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த நடிகர் மோகன் தமிழில் 1980ம் ஆண்டு இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான மூடு பனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, மனைவி சொல்லே மந்திரம், நூறாவது நாள் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர் மோகன்.

சில்வர் ஜுபிளி நாயகன்

சில்வர் ஜுபிளி நாயகன்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் கோலோச்சி வந்த 80களில் காதல் கதைகளில் சூப்பர் ஹிட் பாடல்களுடன் அந்த இரு ஜாம்பவான்களையும் ஓரங்கட்டி சில்வர் ஜூபிளி நாயகன் என பெயர் எடுத்தவர் நடிகர் மோகன். ஏகப்பட்ட வெற்றி விழா கொண்டாடிய படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து கலக்கியவர் மோகன்.

எஸ்பிபி

எஸ்பிபி

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்கள் நடிகர் மோகன் படங்களுக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது. மெளன ராகம், பாடு நிலா, மெல்ல திறந்தது கதவு, ரெட்டை வால் குருவி, உதய கீதம் என ஏகப்பட்ட படங்களின் பாடல்கள் இன்னமும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக வலம் வருகின்றன.

மீண்டும் நடிக்க வந்த மோகன்

மீண்டும் நடிக்க வந்த மோகன்

சினிமாவில் வெற்றி படிகளில் ஏறிக் கொண்டிருந்த நடிகர் மோகன் திடீரென அப்படியே காணாமல் போய் விட்டார். சின்னத்திரை தொடர்களை தயாரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2008ம் ஆண்டு சுட்டப்பழம் எனும் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் மோகனுக்கு பழைய பெயரை பெற்றுத் தரவில்லை. அதன் பிறகு தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார்.

ஹரா

ஹரா

தாதா 87 படத்தை இயக்கிய இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகர் மோகன். ஹரா என டைட்டில் வைக்கப்பட்ட அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டை முன்னிட்டு நேற்று வெளியானது. பழைய மோகனை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மத அரசியல்

மத அரசியல்

ஹரா எனும் வித்தியாசமான டைட்டிலில் உருவாக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டலாக மாறியுள்ளார் மோகன். மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற கோயில், சென்னை ரயில் நிலையம், மசூதி, தாஜ்மஹால், கலவரம், ஆம்புலன்ஸ், போலீசார், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட குறியீடுகள் மூலமாக இந்த படம் சாதி மற்றும் மத அரசியலை பேசும் படமாக உருவாக உள்ளதா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது.

இயக்குநர் விளக்கம்

இயக்குநர் விளக்கம்

இது தொடர்பாக ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு விளக்கம் அளித்த இயக்குநர் விஜய் ஸ்ரீ, இந்த படத்தின் கதை மிகவும் பெரிய விஷயத்தை பேசப் போவதாகவும் இப்போதைக்கு வேறு எதையும் ரிவீல் பண்ண முடியாது என்றும் கூறியுள்ளார். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பப்ஜி மற்றும் பவுடர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X