நடிகர் தனுஷின் அடுத்த மூவ் என்ன? உண்மையிலேயே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிய இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக கடந்த ஜனவரி 17ம் தேதி அறிவித்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகள் என படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் தனுசுக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் பிரிவதற்கு பல்வேறு காரணங்களும் யூகங்களும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றன.

தனுஷ் ஐஸ்வர்யா திருமணம்

தனுஷ் ஐஸ்வர்யா திருமணம்

கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இந்த திருமணத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சம்மதிக்கவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், மகளுக்காக திருமணத்திற்கு அவர் சம்மதித்ததாக ஏகப்பட்ட தகவல்கள் அப்போது பரவின.

வேலையால் வந்த பிரச்சனை

வேலையால் வந்த பிரச்சனை

நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் என்பது ரசிகர்களுக்கே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை வேலை பிசியில் இருக்கும் நடிகர் தனுஷ் குடும்பத்தை சரிவர கவனிக்காததே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

நடிகையுடன் தொடர்பா

நடிகையுடன் தொடர்பா

நடிகர் தனுஷ் மனைவியை பிரிய முக்கிய காரணமே அவர் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் உள்ளார் என்கிற மோசமான குற்றச்சாட்டு தான் சமூக வலைதளங்களில் தனுஷின் ஹேட்டர்களால் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த மூவ் என்ன

அடுத்த மூவ் என்ன

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இருவரது அடுத்த மூவ் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆன்மிகம் மற்றும் யோகாவில் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு பிடித்ததை செய்ய போகிறார் என்றும் நடிகர் தனுஷ் பாலிவுட் பக்கம் போகப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பையில் வீடு

மும்பையில் வீடு

ராஞ்சனா, ஷமிதாப் படங்களை தொடர்ந்து சமீபத்தில் அட்ரங்கி ரே என இதுவரை நடிகர் தனுஷ் 3 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் தனக்கு நல்ல வரவேற்பு உள்ளதை அறிந்து கொண்ட நடிகர் தனுஷ் தொடர்ந்து இந்தி படங்களில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மேலும், ஹாலிவுட் வாய்ப்புகளிலும் கவனம் செலுத்த மும்பையிலேயே ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகப் போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

Recommended Video

Dhanush & Aishwarya Separation | Aishwarya போட்ட Tweet - இந்த பிரிவு தேவை | Filmibeat Tamil
சம்மதிக்கவில்லை

சம்மதிக்கவில்லை

ஆனால், நடிகர் தனுஷின் இந்த திட்டத்திற்கு மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சம்மதம் தெரிவிக்காத நிலையில் தான் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரியவே முடிவெடுத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் அப்பா வீட்டுக்கு பக்கத்திலேயே குடியேற வேண்டும் என்பதே ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கனவாக இருந்ததாம். ஆனால், தனுசுக்கு அதில் விருப்பமில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவே இருவரும் விவாகரத்து அறிவித்ததற்கு பின்னணியில் வேலை தான் காரணமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மையை என்பது நடிகர் தனுஷின் அடுத்த கட்ட நகர்வுகள் தான் வெளிப்படுத்தும் என்பது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X