For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காலாவில் ராமாயணம்.. கர்ணனில் மகாபாரதம்.. பா. ரஞ்சித் பாணியில் மாரி செல்வராஜ்.. சொல்ல வருவது என்ன?

  |

  சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் பாணியிலேயே மாரி செல்வராஜும் கர்ணன் படத்தை இயக்கி உள்ளார் என்கிற காரசார விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

  இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் என சொல்லப்படும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கருவாக கொண்டே இந்த இரு படங்களும் வெளியாகி உள்ளன என்ற பேச்சுக்கள் படத்தின் காட்சிகளை வைத்தே டீகோடிங் செய்யப்பட்டு வருகின்றன.

  கார்.. பைக்கெல்லாம் இல்லை.. இது வேறமாரி.. வலிமையில் காத்திருக்கும் மாஸ் சீன்.. டாப் அப்டெட்!

  கர்ணன் படத்தின் கதையின் முக்கிய கரு 'பஸ்' என்பதையும் தாண்டி அதில் திணிக்கப்பட்டுள்ள மகாபாரத கதை தான் என்கின்றனர்.

  காலாவில் ராமாயணம்

  காலாவில் ராமாயணம்

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் தாராவியில் நடக்கும் பிரச்சனை உடன் ராமாயண இதிகாசத்தையும் திணித்து ஏகப்பட்ட உருவகங்களை வைத்து படமாக இயக்கி இருப்பார் இயக்குநர் பா. ரஞ்சித். "ஒத்த தல ராவணா" என வரும் பாடல் வரிகள் தொடங்கி, வட இந்திய நடிகரான நானா படேகரை வில்லனாக சித்தரித்த விதம், கடைசியில் இலங்கையை தீயிட்டு எரித்ததை போல காலா சேட்டின் கோட்டையை தீயிட்டு எரிப்பது. ஹனுமார் போல ஒரு அடியாள் கதை போன்ற ஆயுதத்தால் அடித்து நொறுக்குவது என ஏகப்பட்ட குறியீடுகள் இருக்கும். அந்த படம் வந்த நேரத்திலும் அது பற்றிய விவாதங்கள் சூடுபிடித்தன.

  குரு வழியில் சிஷ்யன்

  குரு வழியில் சிஷ்யன்

  இயக்குநர் பா. ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநரான மாரி செல்வராஜும், தற்போது தனது குரு வழியை பின் பற்றும் விதமாக மகாபாரதத்தை தனது பொடியன்குளம் கிராமத்தில் நிகழ்த்தி கர்ணனாக உருவாக்கி உள்ளார் என்கிற விவாதமும் தற்போது எழுந்து வருகிறது.

  கர்ணனில் மகாபாரதம்

  கர்ணனில் மகாபாரதம்

  மகாபாரத கதாபாத்திரமான சூர்ய புத்திர கர்ணன் தான் படத்தின் பெயரே, வில்லுக்கு பதிலாக இங்கே வாள். அறிமுக காட்சியில் மச்ச இயந்திரத்தை வில் வித்தை திறமையால் கர்ணன் வீழ்த்துவது போலவே, இங்கே வாள் கொண்டு யாராலும் வெட்ட முடியாத மீன் ஒன்று வெட்டப்படுகின்றது.

  துரியோதனன்

  துரியோதனன்

  பொடியன் குளம் ஊர் தலைவராக நடித்துள்ள ஜி.எம். குமாருக்கு துரியோதனன் எனப் பெயர். கர்ணனுக்கு ஆதரவாக அவர் எப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏமன் எனும் கதாபாத்திரத்தில் சகுனி மாமனாக லால் உருவகப்படுத்தப்பட்டு உள்ளாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

  திரெளபதை

  திரெளபதை

  இயக்குநர் மாரி செல்வராஜ் இந்த பெயர்கள் குறித்த கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், கர்ணன் படத்தில் வரும் பெயர்கள் எல்லாம் எங்க ஊரில் வைக்கப்பட்டுள்ள பெயர்கள் தான் என எஸ்கேப் ஆகும் விதத்தில் பேசியுள்ளார். ஆனால், அக்காவுக்கோ, தங்கைக்கோ, கெளரி கிஷன் நடித்த கதாபாத்திரத்திற்கோ திரெளபதை எனும் பெயர் வைக்காமல் நாயகிக்கு வைத்திருப்பது ஏன் என்கிற கேள்வியையும் பலர் கேட்டு வருகின்றனர்.

  சூது விளையாட்டு

  சூது விளையாட்டு

  இவை மட்டுமின்றி காசு சுண்டிப் போட்டு ஆடும் விளையாட்டை காட்டி சூது விளையாட்டையும் உட்புகுத்தி உள்ளார் மாரி செல்வராஜ். மேலும், சூது விளையாட்டின் போது உங்க அக்காவை நான் ரெண்டா தாரமா கட்டிக்கிறேன் என யோகி பாபு பேசி, சூது விளையாட்டில் பெண்ணை அசிங்கப்படுத்தியதையும் காட்சிப்படுத்தி உள்ளார்.

  கண்ணபிரான்

  கண்ணபிரான்

  எல்லாவற்றுக்கும் மேலாக போலீஸ் வில்லனாக வரும் நட்டி நடராஜுக்கு கண்ணபிரான் என பெயர் வைத்துள்ளார் மாரி செல்வராஜ். பொடியன்குளம் ஊரில் பேருந்து நிற்பதில்லை என்கிற கதையில் கடைசியில் போர் செய்ய வேண்டும் என மக்களை திரட்டுவது என ஏன் இத்தனை மகாபாரத குறியீடுகளை உட்புகுத்தி உள்ளார் என்றும் கேள்விகள் எழத்தான் செய்கிறது.

  மாமனார் மருமகன்

  மாமனார் மருமகன்

  காலா படத்தில் ரஜினிகாந்தை வைத்து பா. ரஞ்சித் இயக்கிய நிலையில், கர்ணன் படத்தில் மருமகன் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரு படங்களும் உரிமைக்காக குரல் கொடுக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.

  வலியும் குமுறலும்

  வலியும் குமுறலும்

  சுயநலம் காரணமாக மனிதனுக்குள்ளே எழுந்த பாகுபாட்டினால் ஏற்பட்ட உயர்வு தாழ்வு பார்வைகளால் நெடுங்காலமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களின் வலியையும் குமுறலையும் கர்ணன் வழியாக பதிவு செய்து மாரி செல்வராஜ் பாராட்டுக்களை அள்ளி உள்ளார். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வில்லன்களாக காட்டப்பட்டவர்கள் உண்மையில் ஹீரோக்கள் என சிவாஜி நடித்த கர்ணன் படத்திலேயே காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

  KARNAN REVIEW - POSTER PAKIRI | FILMIBEAT TAMIL
  சரி சமமாக

  சரி சமமாக

  பரியேறும் பெருமாள் படத்தில் சாதிய பிரச்சனையை டீ கிளாஸ் மூலமாக கையாண்ட இயக்குநர் மாரி செல்வராஜ், கர்ணன் படத்தில் கழுத்தை வெட்டி கோபத்தை கொட்டியவுடனே சிலர் அவரை திட்டத் தொடங்கி உள்ளனர். வைஃபை சரியாக ஒரு மணி நேரம் வேலை செய்யவில்லை என்றாலே கோபம் வரும் நிலையில், அடிப்படை உரிமைகள் வேண்டுமென்றே மறுக்கப்படும் மனிதர்களுக்கு கோபம் வரக் கூடாதா? என்கிற நியாயமான கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஒருவன் குட்ட ஒருவன் குனிய வேண்டும் என்பதை மாற்றத்தான் இதுபோன்ற குறியீடுகளை இருவரும் பயன்படுத்தி உள்ளனரா? என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.

  English summary
  Director Pa Ranjith touches and alters Ramayana story for Kaala. Now, Mari Selvaraj uses Mahabharat story for Karnan.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X