twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தி கிரே மேன் 2 ல் தனுஷ் தான் ஹீரோவா?...டைரக்டர் சொன்ன செம தகவல்

    |

    சென்னை : ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் Ryan Gosling and Chris Evans, தனுஷ் நடித்த தி கிரே மேன் படம் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த ஆக்ஷன் த்ரில்லர் படமான தி கிரேன் மேன் படத்தில் தனுஷ் Avik San என்ற ரோலில் நடித்திருந்தார். கொடூர கொலையாளி ரோலில், கெஸ்ட் ரோலில் தான் தனுஷ் நடித்திருந்தார்.

    தனுஷிற்காகவே அவரது ரசிகர்கள் தி கிரே மேன் படத்தை அதிகம் பார்த்தனர். இந்த படத்திற்கு பிறகு தனுஷின் அடுத்தடுத்த படங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன.

    சிக்ஸ் அவனை தேடி நீ போகாத.. தி கிரே மேன் 2 படத்தின் தாறுமாறான அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்! சிக்ஸ் அவனை தேடி நீ போகாத.. தி கிரே மேன் 2 படத்தின் தாறுமாறான அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்!

    தி கிரே மேன் 2 ல் தனுஷ்

    தி கிரே மேன் 2 ல் தனுஷ்

    முதலில் தி கிரே மேன் படத்தில் தனுஷை நடிக்க வைக்க டைரக்டர்கள் நினைக்கவில்லை என்றும், படத்தில் தனுஷ் நடித்த கேரக்டரை கொலை செய்வதுமாக தான் முதலில் கதை அமைக்கப்பட்டதாகவும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது. பிறகு தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டதால் அவரின் கேரக்டரை பவர்ஃபுல்லாக உருவாக்க முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.

     தனுஷ் கேரக்டர் கொல்லப்படாதது ஏன்?

    தனுஷ் கேரக்டர் கொல்லப்படாதது ஏன்?


    தி கிரே மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க போவதாக கடந்த வாரம் ரூசோ பிரதர்ஸ் உறுதி செய்தனர். தி கிரே மேன் படத்தில் தனுஷை போதிய அளவில் பயன்படுத்தாததால் தான் அவரின் கேரக்டரை கொலை செய்யவில்லை என டைரக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    டைரக்டர்கள் சொல்வது என்ன

    டைரக்டர்கள் சொல்வது என்ன

    ஜியோ மற்றும் ஆன்டனி ரூசோ சமீபத்தில் அளித்த பேட்டியில், படத்தில் தனுஷை ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. படத்தில் லீட் ரோலில் நடித்த Ryan Gosling க்கு இணையான திறமை படைத்தவர் தனுஷ். அவருக்கென தனி கதை உள்ளது. அவரை மீண்டும் கொண்டு வர ஒரு கதை உருவாக்கி உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

    தனுஷ் தான் ஹீரோவா?

    தனுஷ் தான் ஹீரோவா?

    முன்னாள் உளவாளி ஒருவரை பல வேலைகளுக்காக சிஐஏ பயன்படுத்துகிறது. கடைசியில் அந்த உளவாளியை கொலை செய்ய பல கும்பல்கள் துரத்துகின்றன. அவர்களிடம் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் தி கிரே மேன் படத்தின் கதை.தி கிரே மேன் படத்தில் சிறிய ரோலில் நடித்த தனுஷை கேரக்டரை மீண்டும் கொண்டு வரவும், படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் டைரக்டர்கள் முடிவு செய்திருப்பதால் தி கிரே மேன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் ஹீரோவாக இருப்பாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

    இது சாத்தியமா?

    இது சாத்தியமா?

    ஆனால் தி கிரே மேன் படம் ஹாலிவுட் படம் என்பதால் தனுஷை ஹீரோவாக போட்டால் யாருக்கும் தெரியாது. வியாபாரமும் ஆகாது. அதே நேரம் இவர்கள் ஏன் தனுஷை பயன்படுத்துகிறார்கள் என்றால் இந்திய மார்க்கெட்டில் குறிப்பாக கோலிவுட், டோலிவுட் போன்ற அதிக வருவாய் உள்ள வியாபார தளங்களில் தனுஷை வைத்து வியாபாரம் நடக்கும்.இந்தியன் ஓடிடியிலும் அதிகம் விற்பனை ஆகும் என்பதற்காகத்தான்.

    நெட்ஃபிளிக்சின் பிளான் இதுவா?

    நெட்ஃபிளிக்சின் பிளான் இதுவா?

    சமீப காலங்களில் இந்தியாவில் நெட்ஃபிளிக்சின் வருவாய் பெரிதும் சரிந்து விட்டதாகவும், சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் புள்ளி விபரம் சொல்கிறது. இதனால் இழந்த இந்திய மார்க்கெட்டை மீண்டும் பிடிப்பதற்காக கூட நெட்ஃபிளிக்ஸ், தனுஷை முக்கிய ரோலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கலாம் என சினிமா வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    In a recent interview, Joe and Anthony Russo explained what inspired Dhanush’s casting in the movie and why his character was not killed off. “We’re fortunate enough to use Dhanush. We were not interested in him playing a one-off character who shows up just to be overcome by the lead in the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X