மாநாடு படத்திற்கு கடைசி நேரத்தில் உதவியது உதயநிதி இல்லையா? தயாநிதி அழகிரி தானா? வைரலாகும் ட்வீட்!

சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.

Recommended Video

Maanadu Release-க்கு ஏற்பட்ட சிக்கல்.. உள்ளே வந்த Udhayanidhi Stalin.. என்ன நடந்தது?

இந்த படம் ரிலீஸாகும் என்கிற நம்பிக்கை நேற்று மாலை வரை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கே இல்லை.

உதயநிதி ஸ்டாலின் தான் முன் வந்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் என தகவல்கள் பரவிய நிலையில், தற்போது தயாநிதி அழகிரி தான் மாநாடு திரைப்படம் வெளியாக உதவி உள்ளார் என கூறப்படுகிறது.

ரிலீசானது மாநாடு

ரிலீசானது மாநாடு

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படம் கடைசி நேரத்தில் தள்ளிப் போனது. நவம்பர் 25ம் தேதியான இன்று படம் வரும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட்கள் புக் ஆன நிலையில், நேற்று மாலை முதல் இரவு வரை படம் வெளியாகுமா? ஆகாதா என பல போராட்டங்கள் நடந்தன. கடைசியில் படம் இன்று வெளியானது.

ஸ்பெஷல் ஷோ ரத்து

ஸ்பெஷல் ஷோ ரத்து

சிம்பு படம் என்பதால் அதிகாலை 5 மணி காட்சியை வெளியிட பல திரையரங்குகள் தயாராக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் KDM பிரச்சனை ஏற்பட்டு ஸ்பெஷல் ஷோ ரத்து செய்யப்பட்டது. அந்த பிரச்சனையையும் படக்குழு சரி செய்து காலை 8 மணிக்கு முதல் காட்சியை வெளியிட்டது.

பிளாக்பஸ்டர்

பிளாக்பஸ்டர்

மாநாடு திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படம் என பாசிட்டிவ் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அஜித், விஜய், சூர்யா, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

உதயநிதி உதவினாரா

உதயநிதி உதவினாரா

மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகத்தான் படம் வெளியீட்டில் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றும் கலைஞர் டிவி இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்று படத்தை ரிலீஸ் செய்ய உதயநிதி ஸ்டாலின் உதவி செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது நன்றி ட்வீட்களை தயாரிப்பு தரப்பு வெளியிடவில்லை.

தயாநிதி அழகிரி உதவி

தயாநிதி அழகிரி உதவி

இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் நண்பரான தயாநிதி அழகிரி தான் கடைசி நேரத்தில் படம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வெளியாக உதவினார் என யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தயாநிதி அழகிரி பதில்

தயாநிதி அழகிரி பதில்

அந்த ட்வீட்டுக்கு கீழ் பதில் அளித்த தயாநிதி அழகிரி "சத்தியமா இல்ல ப்ரோ.. உங்களை போல நானும் படம் ரிலீசாக வேண்டும் என வேண்டிக் கொண்டேன். நல்ல வேளையாக படம் தடைகளை தாண்டி வெளியாகி விட்டது சந்தோஷம் என ட்வீட் போட்டுள்ளார். மாநாடு படத்திற்கு உண்மையாகவே என்ன பிரச்சனை? யார் அழுத்தம் கொடுத்தார்? யார் படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் என்பது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X