Actor Vijay: இறுதிப்படத்திற்கு ஹெச் வினோத்தை டிக் செய்தாரா விஜய்?.. ட்ரெண்டாகும் தளபதி 69!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சென்னை, ஐதராபாத், கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் ஏப்ரல் முதல் வாரத்தில் மாஸ்கோ செல்லவுள்ளனர். சமீபத்தில் தன்னுடைய கட்சியை அறிவித்துள்ள விஜய், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த நேரத்தில் இந்தியாவில் இல்லாமல் இருக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் நேரத்தில் அவர் மாஸ்கோவில் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே எப்போதும் சைக்கிளில் வந்து அழகாக வாக்கை பதிவு செய்து, ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருடைய கவனத்தையும் கவரும் வாடிக்கையை மேற்கொண்டுவரும் விஜய், தேர்தல் நேரத்தில் இங்கில்லாமல், தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றாமல் வெளிநாட்டிற்கு சூட்டிங்கிற்காக செல்வது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து என்னமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை அறிய அரசியல் மற்றும் சினிமா விமர்சகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Is Director H Vinoth directs Vijay s Thalapathy 69 movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக வெளிநாட்டிற்கு படக்குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ செல்லவுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இரு வாரங்களுக்கு இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கும் என்றும் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்துவிட்டே படக்குழுவினர் மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

GOAT படம்: இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் நேற்றைய தினம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். தொடர்ந்து விஜய் பிறந்தநாளில் படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் சூழலில் படம் அதிரடி ஆக்ஷன் படமாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவனத்தை பெற்ற தளபதி 69: இந்தப் படத்தை தொடர்ந்து விஜய்யின் தளபதி 69 படம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்து முடித்தவுடன் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்குப்பட நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் குறித்த அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்தப் படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

தளபதி 69 படத்தின் இயக்குநர் ஹெச் வினோத்?: இதையடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து தளபதி 69 படம் ட்ரெண்டிங்கில் உள்ளது. தளபதி 63 படத்தையே ஹெச் வினோத் இயக்கவிருந்ததாகவும் ஆனால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்குநம் வாய்ப்பு முதலில் கிடைத்ததால் அவர் அந்தப் படத்தை இயக்க சென்றதால் அட்லீயுடன் பிகில் படத்தில் விஜய் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அவர் முன்னதாக சொன்ன கதைக்களத்திலேயே விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்திலேயே துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யை வைத்து அரசியல் படம்?: தனிடையே விஜய்யை வைத்து படமியக்கினால் அது கண்டிப்பாக அரசியல் சார்ந்த படமாகவே இருக்கும் என்று முன்னதாக பேட்டியொன்றில் ஹெச் வினோத் கூறியிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தான் அவருக்கு சொன்ன கதைகளில் எல்லாமே பாலிடிக்ஸ் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ள விஜய், வரும் 2026 சட்டசபை தேர்தலில் பங்கேற்கவுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவரது இறுதிப்படமும் கண்டிப்பாக அரசியல் சார்ந்த படமாக அமைவதையே விஜய் மட்டுமில்லாமல் ரசிகர்களும் விரும்புவார்கள் என்பதால் விஜய்யின் இறுதிப்படத்தை ஹெச் வினோத் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X