மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூம் நடிக்கிறாரா? வெளியான வைரல் புகைப்படம்!!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் எப்பொழுது வெளியிடப்படும் என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Recommended Video
அதே சமயம், ஓடிடி தளத்தில் வெளியாகுமா 'மாஸ்டர்' திரைப்படம்? என்ற விவாதங்களும் நடந்து கொண்டு இருக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்று, மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூம் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

படக்குழு எதிர்பார்ப்பு
லாக்டவுன் காரணமாக, 'மாஸ்டர்' பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், இன்றைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படக்குழுவினர் 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளனர். அதே சமயம், இந்த வருட இறுதிக்குள், சகஜநிலை திரும்பும் எனப் படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ப்ளூப்பர்ஸ்
இந்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்த, படக்குழுவினர் மாஸ்டர் படத்தின் இறுதியில், ஒரு சில சுவாரசிய ப்ளூப்பர்ஸ்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சொதப்பல்கள், சுவாரசிய சம்பவங்கள், கிண்டல்கள் என அனைத்தையும் ஒன்று சேர்த்து ப்ளூப்பர்ஸ் பாணியில் படத்தின் இறுதியில் இணைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
மாஸ்டர் படம் எப்போ வரும் என்று விஜய் ரசிகர்களும், பொது மக்களும் ஆவலாக உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், நடிகர்களுடன் லோகேஷ் கனகராஜும் உள்ள நிலையில், அவரும் படத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கைதி கெட்டப்பில் லோகேஷ்
அந்த புகைப்படத்தில், கைதி கெட்டப்பில் இயக்குனர் லோகேஷ் மற்றும் வசனகர்த்தாவான ரத்னகுமாரும் மற்ற நடிகர்களுடன் உள்ளனர். இந்த அரிய புகைப்படத்தில் நடிகர்கள் தீனா, லல்லு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர் . மேலும் லோகேஷ் கேமியோ அப்பியரென்ஸ், ஏதாவது இருக்குமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

லோகேஷ் நடிக்கவில்லை
ஆனால் ஒரு பக்கம், மாஸ்டர் படத்தில் லோகேஷ் நடிக்கவில்லை என்றும், படப்பிடிப்பின் போது, ஒரு சீன் எடுக்கும் போது, டைரக்டர் லோகேஷ் கனகராஜும், நானும் இந்த சீனில் கலந்து கொள்வதாக சொல்லி, காஸ்டியூம் மாற்றி, ஜாலியாக நடிகர்களோடு நடிகர்களாக சேர்ந்து, எடுக்கப்பட்ட படமே இது என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் ரசிகர்களோ, புகைப்படத்தில் உள்ள காட்சி, படத்தில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











