டைரக்டர் மிஷ்கின், நடிகர் விஷால் மோதல்... துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகுகிறாரா இயக்குனர்?
Recommended Video
சென்னை: விஷாலின் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து இயக்குனர் மிஷ்கின் விலக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மிஷகின் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்தப் படம் துப்பறிவாளன். இதில் கனியன் பூங்குன்றனாக அவர் நடித்திருந்தார்.
பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய், ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசை அமைத்திருந்தார்.

இரண்டாம் பாகம்
தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் நடிகர் விஷாலே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி மிஷ்கின், விஷால், பிரசன்னா இணைந்தனர். ஹீரோயினாக ஆஷ்யா நடிக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைக்கிறார்.

லண்டனில் ஷூட்டிங்
இதில் ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. ஒரு மாதத்துக்கும் மேல் அங்கு நடந்த படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் படத்தில் நடித்தவர்கள் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்பட்டது.

பட்ஜெட்டை விட
அங்கு ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் படக்குழு சென்னைத் திரும்பியது. இதன் அடுத்த ஷெட்யூலுக்கு ரெடியான நிலையில் மிஷ்கின், தனக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம். இதையடுத்து விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதோடு போட்ட பட்ஜெட்டை விட, மேலும் பல கோடிகளை மிஷ்கின் அதிகப்படுத்தினாராம்.

மீண்டும் பிரச்னை
இப்போதிருக்கும் பிரச்னையில் பட்ஜெட்டை அதிகப்படுத்தினால் பைனான்ஸ் வாங்குவது கஷ்டம் என்றும் அதோடு பிசினஸ் பண்ணுவதும் கஷ்டம் என்றும் விஷால் கூறினாராம்.
இதனால் இருவருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படத்தில் இருந்து மிஷ்கின் விலக இருப்பதாகக் கூறப்படுகிறது. மிஷ்கின் விலகினால், மிச்சமிருக்கும் படத்தை தானே இயக்க நடிகர் விஷால் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











