தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்து.. குடிபோதையில் இருந்தாரா டாக்டர்.ராஜசேகர்.. போலீஸ் விசாரணை!

கார் விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத்: கார் விபத்தில் சிக்கிய பிரபல தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் மது போதையில் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் டாக்டர் ராஜசேகர். தமிழில் 'இது தான்டா போலீஸ்' எனும் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகை ஜீவிதாவை மணந்து கொண்டார். இவர்களது மகள் ஷிவானியும் படங்களில் நடித்து வருகிறார்.

Is Dr.Rajasekar boozed when met with accident?

இரு தினங்களுக்கு முன்பு டாக்டர் ராஜசேகர் கார் விபத்தில் சிக்கினார். ராமோஜி ராவ் பிலில் சிட்டியில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை வீடு திரும்பும் போது, ஷம்சாபாத் பகுதியில் அவரது கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வந்து காரில் இருந்து ராஜசேகரை மீட்டனர். இந்த விபத்தில் ராஜசேகருக்கு அடி எதுவும் படவில்லை. எனவே அவர் வேறொரு காரில் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்துக்குள்ளான காரை சோதனையிட்டனர். அப்போது அதில் இரண்டு மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் ராஜசேகர் மதுபோதையில் கார் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், "அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. காரின் ஏர்பேக் ராஜசேகர் உயிரை காப்பாற்றி உள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் புறப்பட்டு சென்று விட்டதால் மதுபோதையில் இருந்தாரா? என்பதை ஆய்வு செய்யமுடியவில்லை. காருக்குள் மதுபாட்டில் இருந்தது" என தெரிவித்தனர்.

விசாரணையில் ஒருவேளை ராஜசேகர் விபத்து நடந்த போது குடிபோதையில் இருந்ததாக தெரியவந்தால், அவர் கைது செய்யப்படும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X