புஷ்பா 2 படத்தில் ஃபகத் ஃபாசில் கிடையாதா... அப்போ அவர் ரோலில் யார் நடிக்கிறாங்க ?

சென்னை : கடந்த ஆண்டு இறுதியில் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீசாகி, 350 கோடி கலெக்ஷன் பார்த்த படம் புஷ்பா. சேஷாச்சலம் வனப்பகுதியில் காலம் காலமாக நடக்கும் செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த படம் தான் புஷ்பா தி ரைஸ். தெலுங்கில் எடுக்கப்பட்டு, பிறகு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிடப்பட்டது.

சாதாரண கூலி தொழிலாளியாக செம்மரங்களை வெட்ட செல்லும் புஷ்பா, பிறகு எவ்வாறு ஒரு டானாக உருவாகிறான் என்பது தான் முதல் பாகத்தின் கதை. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட உள்ளது.

புஷ்பா 2 படத்தின் கதை

புஷ்பா 2 படத்தின் கதை

செம்மரக் கடத்தலை எவ்வாறு சர்வதேச அளவில் செய்து பெரிய மான்ஸ்டராக உருவெடுக்கிறான், சர்வதேச கடத்தல் சாம்ராஜ்யத்தை எவ்வாறு கைப்பற்றுகிறான் என்பது தான் புஷ்பா தி ரூல் படத்தின் கதை. இந்த படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளதாக குறப்படுகிறது. இதற்கான வேலைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.

ஒரே பாட்டில் பாப்புலரான சமந்தா

ஒரே பாட்டில் பாப்புலரான சமந்தா

புஷ்பா முதல் பாகத்தில் ஹைலைட்டாக பார்க்கப்பட்டது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று மொட்டை அடித்த வனத்துறை அதிகாரியாக வந்து மிரட்டிய ஃபகத் ஃபாசில். மற்றொன்று ஒரே ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆடி உலக அளவில் படத்தை பிரபலமாக்கி, தனது ரேஞ்சையும் உயர்த்திய சமந்தா. படத்தின் ஹீரோயின் ராஷ்மிகாவாக இருந்தாலும், சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் தான் இளசுகள் முதல் பெரிசுகள் வரை சுண்டி இழுத்தது.

புஷ்பா 2 விற்கு நோ சொன்ன சமந்தா

புஷ்பா 2 விற்கு நோ சொன்ன சமந்தா

இந்த ஒரு பாடலுக்கு ஆட சமந்தாவிற்கு 100 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.புஷ்பா 2 படத்திலும் ஒரு பாடலுக்கு அயிட்டம் சாங் ஆட சமந்தாவிடம் கேட்கப்பட்டதாகவும், அவர் அதை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பாலிவுட்டின் டாப் நடிகை ஒருவரை அயிட்டம் சாங் ஆட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

விஜய் சேதுபதி நடிக்கிறாரா

விஜய் சேதுபதி நடிக்கிறாரா

இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் மிக முக்கியமான ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசப்பட்டு வருவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதுவரை விஜய் சேதுபதி எந்த பதிலும் சொல்லவில்லை என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி என்ன ரோலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

புஷ்பா 2 லிருந்து வெளியேறிய ஃபகத் ஃபாசில்

புஷ்பா 2 லிருந்து வெளியேறிய ஃபகத் ஃபாசில்

லேட்டஸ்ட் தகவலின் படி, தயாரிப்பு நிறுவனத்துடனான கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் புஷ்பா 2 படத்தில் ஃபத் ஃபாசில் நடிக்கவில்லையாம். இதனால் புஷ்பா 2 படத்தில் நடிக்க ஃபகத் ஃபாசில் முடியாது என உறுதியாக மறுத்து விட்டாராம். அதனால் தான் அவர் இடத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க, தேர்வு நடத்தப்பட்டதால் ஷுட்டிங்கை துவக்க இத்தனை நாட்கள் தாமதமாகி வந்ததாம்.

மீண்டும் காக்கி சட்டை போடும் விஜேஎஸ்

மீண்டும் காக்கி சட்டை போடும் விஜேஎஸ்

ஃபகத் ஃபாசில் நடித்த ரோலில் வனத்துறை அதிகாரி ரோலில் தான் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம். ஒருவேளை இந்த ரோலில் நடிக்க விஜய் சேதுபதி ஓகே சொன்னால், சேதுபதி படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் காக்கி சட்டை போட போகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் அவர் பெரிய வில்லனாக உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உபன்னா படத்தில் நடித்ததன் முலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது.

Recommended Video

நான் பிறந்த ஊர்ல என்ன இப்படி ரசிக்குறாங்க! | Allu Arjun speech in Pushpa Success Meet
படம் எப்போ ரிலீஸ்

படம் எப்போ ரிலீஸ்

ஆகஸ்ட் மாதம் துவங்கி புஷ்பா 2 பட ஷுட்டிங் தொடர்ந்து நடைபெற உள்ளதாம். 2023 ம் ஆண்டு கோடை விடுமுறை சமயத்தில் புஷ்பா 2 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிவைத்து முதல் பாகத்தை வெளியிட்டதை போல், கோடை விடுமுறையை குறிவைத்து புஷ்பா 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X