யார் அந்த பிரபலத்தின் பேரன்? ஜெமினி கணேசன் பேரன் அபிநய் வட்டி மறைமுகமாக சொல்ல வந்தது இவரைத்தானா?

சென்னை: தென்னிந்திய சினிமாவிலேயே பெரும் புகழுடன் திகழ்ந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரனான அபிநய் வட்டி இந்த 5வது பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

நடிகையர் திலகத்தின் பேரன் அபிநய் வட்டி தான் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் தனக்கு மறுக்கப்பட்ட சினிமா வாய்ப்புகள் குறித்து நேற்றைய எபிசோடில் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

அபிநய் வட்டி பேசும் போது, தான் நடிக்கவிருந்த முதல் படத்தில் தனக்கு பதிலாக ஒரு பிரபல நடிகரின் பேரன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டார் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட யார் அந்த பிரபலம்? அபிநய் வட்டி குறிப்பிட்டது எந்த பேரன் நடிகரை மற்றும் இயக்குநர் யார்? என்கிற அலசல்கள் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன.

ஜெமினி சாவித்திரி பேரன்

ஜெமினி சாவித்திரி பேரன்

ஒரு பக்கம் வாரிசு நடிகர்கள் தான் சினிமா உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மறு பக்கம் நான் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் என்னை அழைத்து பலரும் பேசுகின்றனர். ஆனால், பட வாய்ப்புகளை தர மறுக்கின்றனர் என அபிநய் வட்டி பகீர் குற்றச்சாட்டை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கிறது.

சினிமாவுக்கு அனுப்பிய மனைவி

சினிமாவுக்கு அனுப்பிய மனைவி

ஜெமினி கணேசன் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியின் பேரனான அபிநய் வட்டி சினிமாவில் தன் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தாத நிலையில், வாழ்வில் எந்த குறிக்கோளும் இன்றி சுற்றித் திரிந்த தன்னை தனது மனைவி தான் சினிமா பக்கம் போக அறிவுறுத்தினார் என்று மனைவியின் புகழை பாடினார்.

ராமானுஜன் படத்தில் ஹீரோ

ராமானுஜன் படத்தில் ஹீரோ

வெளிநாட்டில் செட்டில் ஆகி இருந்த நிலையில், சினிமாவுக்காக மீண்டும் இந்தியா வந்தேன் எனக் கூறிய அபிநய் வட்டி கடந்த 2014ம் ஆண்டு வெளியான 'ராமானுஜன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆடிஷன் இறுதிக்கு சென்றதும் தான் ஜெமினி - சாவித்ரி பேரன் என இயக்குநர் ஞான ராஜசேகரனிடம் சொன்னதால் தான் அந்த வாய்ப்பும் தனக்கு கிடைத்தது என்பதை மறைமுகமாக கூறியிருந்தார் அபிநய் வட்டி.

முதல் படம் இதுவல்ல

முதல் படம் இதுவல்ல

கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு படம் தான் அபிநய் வட்டி நடித்து வெளியான முதல் படம் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தன்னுடைய முதல் படம் ராமானுஜன் இல்லை என்றும் அதற்கு முன் ஒரு படத்தில் நடிக்க செலக்ட் ஆகி கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு வேறு ஒரு பிரபல நடிகரின் பேரனுக்கு சென்று விட்டதாகவும் ஆனால், பெயரை கூற விரும்பவில்லை என்றும் அபிநய் வட்டி மென்று முழுங்கி விட்டார்.

யார் அந்த பேரன்

யார் அந்த பேரன்

ஜெமினி கணேசனின் பேரன் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பு கடைசி நேரத்தில் கை நழுவி போக காரணமாக இருந்த பிரபல நடிகரின் பேரன் யார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் பேரன் என்றால் முதல் நபராக அனைவர் நினைவுக்கும் வரும் அதே நடிகரை தான் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

சிவாஜி பேரன்

சிவாஜி பேரன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவைதான் அபிநய் வாடி குறிப்பிட்டுள்ளார் என ரசிகர்கள் அவர் நடித்த ராமானுஜன் படம் வெளியான ஆண்டு மற்றும் அதற்கு முன்பாக வெளியான கும்கி படத்தின் ரிலீஸ் தேதி உள்ளிட்டவற்றை வைத்து கெஸ் செய்து வருகின்றனர்.

பிரபு சாலமன்

பிரபு சாலமன்

கும்கி படத்தை இயக்குநர் பிரபு சாலமன் 2012ம் ஆண்டு ரிலீஸ் செய்த நிலையில், 2014ம் ஆண்டு அபிநய் வட்டியின் முதல் படமான ராமானுஜன் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் இடையே இரு வருட இடைவேளை மட்டுமே இருப்பதால் அபிநய் வட்டி பிக் பாஸ் வீட்டில் சொல்ல வந்தது விக்ரம் பிரபு மற்றும் கும்கி பட இயக்குநர் பிரபு சாலமன் பற்றி தான். கும்கியில் அபிநய் வட்டி நடித்திருந்தால் அவரது எதிர்காலமும் மாறியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வாய்ப்பு கொடுப்பாரா பிரபு சாலமன்

வாய்ப்பு கொடுப்பாரா பிரபு சாலமன்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல போட்டியாளர்களும் பிரபலங்களாக மாறி சினிமா வாய்ப்புகளை குவித்து வரும் நிலையில், ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் பகிரங்கமாக இந்த நிகழ்ச்சியில் மீண்டும் அந்த இயக்குநர் படத்தில் நான் நடிப்பேன் என சொல்லி உள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குநர் பிரபு சாலமன் அபிநய் வட்டிக்கு வாய்ப்பு கொடுப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓப்பனா பேசல

ஓப்பனா பேசல

ஆனால், அந்த பேரன் விக்ரம் பிரபு தான் என்றோ அந்த இயக்குநர் பிரபு சாலமன் என்றோ பிக் பாஸ் வீட்டில் அபிநய் வட்டி வெளிப்படையாக கூறாத நிலையில், அந்த பிரபல நடிகரின் பேரன் பிரபல நடிகரின் பேரனாகவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் மட்டுமே புரியட்டும் என்பதற்காக மட்டுமே இந்த டாப்பிக் பற்றி அபிநவ் வட்டி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X