சினிமாவுக்கு முழுக்குப் போட்ட முன்னாள் ஹீரோயின்.. பிரபல ஹீரோவின் தங்கை ஆவாரா..? படக்குழு முயற்சி

By

ஐதராபாத்: நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்ட பிரபல முன்னாள் ஹீரோயினை மீண்டும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

Recommended Video

Couple Quarantine | Sayyeesha Cup cakes | Genelia | Mahat Prachi

தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்த இவர், பிரபல இந்தி நடிகரும் மகாராஷ்ட்ர முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நடிப்பை நிறுத்தினார்

நடிப்பை நிறுத்தினார்

இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டார். சில இந்தி படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் அவரை மீண்டும் நடிக்க வைக்க தெலுங்கு படக்குழு முயற்சி செய்து வருகிறது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

மலையாளத்தில், மோகன் லால் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம், லூசிஃபர். இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கி இருந்தார். இதில், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோ தாமஸ், உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்த படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. வசூலில் இந்தப் படம் சாதனை செய்தது.

ராம்சரண் தேஜா

ராம்சரண் தேஜா

இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். சாஹோ படத்தை இயக்கிய சுஜித் இயக்குகிறார். இதன் திரைக்கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி படமாக்க உள்ளனர். நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா இதைத் தயாரிக்கிறார். தெலுங்குக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

ஜெனிலியா

ஜெனிலியா

லூசிஃபர் படத்தில் மோகன்லால் தங்கையாக, மஞ்சு வாரியர் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் நடிக்க வைக்க நடிகை ஜெனிலியாவை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் தரப்பில் இதுவரை பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சிரஞ்சீவி இப்போது ஆச்சாரியா படத்தில் நடிக்கிறார். இதையடுத்து லூசிஃபர் ரீமேக்கில் நடிப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X