ஜிபி முத்து மகனுக்கு என்ன ஆச்சு..இதற்காகத்தான் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினாரா?
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சோஷியல் மீடியாவில் அவரது மகன் மருத்துவமனையில் இருப்பது போன்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6ன் முக்கிய போட்டியாளரான ஜிபி முத்துவுக்கு அவரது ரசிகர்கள் ஆர்மியை தொடங்கி அவருடைய வீடியோக்களை டிராண்டாக்கி வருகின்றனர்.
இந்த சீசனின் வலுவான போட்டியாளராக இருந்த ஜிபி முத்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல் போட்டியாளராக
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, அக்டோபர் 9 ஆம் தேதி ஆட்டம் பாட்டம் என்று மிகவும் கோலாகலமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் ஜிபி முத்து. அவர் வீட்டிற்கு வந்ததுமே போட்டியாளர்களுடன் நட்பாக பழகினார். சக போட்டியாளர்களுடன் அலப்பறை செய்து மேலும் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

வியந்து போன ரசிகர்கள்
அது மட்டும் இல்லாமல் கேப்டன் பதவிக்கு போட்டி நடைபெறும் போது, ஜிபி முத்து காய்ச்சலில் இருந்தார். அப்போதும் 4 மணி நேரம் கடிகாரத்தில் நின்று பிக் பாஸ் சீசன்6ன் முதல் கேப்டன் ஆனார். கலகலப்பாக, வெகுளித்தனமாக அவர் பேசியதை மட்டுமே பார்த்து வந்த அவரது ரசிகர்கள், ஜிபி முத்துவின் விடா முயற்சியை பார்த்து உண்மையில் வியந்து போனார்கள்.

வீட்டுக்கு போகணும்
கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருந்த ஜிபி முத்து கடந்த நான்கு நாட்களாக தனது குடும்பத்தையும்,மகனையும் நினைத்து அழுதுக்கொண்டே இருந்தார். நான் வீட்டுக்கு போகணும், தம்பியை வரச்சொல்லுங்க, என்னால முடியல என்று அழுதுக்கொண்டே இருந்தார். பிக் பாஸ் அழைத்து அவரை பல முறை சமாதானப்படுத்தியும் இவர் அழுதுக்கொண்டே இருந்தார்.

வெளியேறினார்
இதையடுத்து, நேற்று கமலும் ஜிபி முத்துவிடம் பேசினார். உங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு , மக்கள் நீங்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறினார். ஆனால், இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாத ஜிபி முத்து தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மகன் மீது அவர் வைத்திருந்த பாசத்திற்கு மதிப்பு கொடுத்து கமல் அவரை வெளியில் அனுப்பி வைத்தார்.

ஜிபி முத்து மகனுக்கு என்ன ஆச்சு?
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே ஜிபி முத்து வெளியே வந்துள்ள நிலையில், ஜிபி முத்துவின் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இணையத்தில் பரவி வரும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. நேற்று கமல் கூட உங்கள் மகன் விஷ்ணு நன்றாக இருக்கிறான் இதைப்பார்த்துக்கொண்டு இருப்பான் என்றார். இதனால், சோஷியல் மீடியாவில் வெளிவந்துள்ள போட்டோ எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications