ரொமான்ஸ் செய்த ஹீரோவையே டார்ச்சர் செய்யும் ஹன்சிகா: உண்மை என்ன?
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் படத்தில் ஹன்சிகா வில்லியாக நடிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் ஏஏ19. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.
சத்யராஜ், தபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு தமண் இசையமைக்கிறார்.

ஹன்சிகா
ஏஏ19 படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லியாக ஹன்சிகா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. தேசமுத்ரு படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த ஹன்சிகா இப்படி வில்லியாக மாறிவிட்டாரே என்று பேச்சு கிளம்பியது.

அல்லு அர்ஜுன்
ஹன்சிகாவின் மார்க்கெட் நிலவரம் சரி இல்லாததால் வில்லியாக நடிக்கத் துணிந்துவிட்டார் என்று எல்லாம் விமர்சனம் எழுந்தது. விசாரித்து பார்த்தபோது ஹன்சிகா வில்லியாக நடிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

ஏஏ 19
ஏஏ 19 படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை ஹைதராபாத்தில் துவங்கியது. அல்லு அர்ஜுன் வரும் முக்கிய காட்சிகளை முதல் கட்ட படப்பிடிப்பில் படமாக்குகிறார்கள். முதல் கட்ட படப்பிடிப்பு மே மாதம் முதல் வாரம் வரை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

பூஜா ஹெக்டே
ஹீரோயின் பூஜா ஹெக்டே இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே மாதம் கடைசி வாரத்தில் துவங்குகிறது. ஹன்சிகா வில்லியாக நடிப்பதாக யார் தான் வதந்தியை கிளப்பிவிட்டார்களோ?. அந்த முகத்தை பார்த்தால் வில்லத்தனம் செய்யும் முகம் போன்றா உள்ளது?


Click it and Unblock the Notifications











