ரஜினிகாந்தின் புதிய படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி?

சென்னை: அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் அப்டேட்டை ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகும் 170 படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

அண்ணன் தங்கை பாசத்தை

அண்ணன் தங்கை பாசத்தை

தொடர்ந்து அஜித்துடன் இணைந்து பணியாற்றி வந்த சிறுத்தை சிவா முதல்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்த திரைப்படம் அண்ணாத்த. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்திருந்தது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

நெல்சன் இயக்கத்தில்

நெல்சன் இயக்கத்தில்

ரஜினிகாந்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அண்ணன் தங்கை பாசத்தில் அனைவரும் உருகும் வகையில் படத்தில் காட்டியிருப்பார்கள். அண்ணாத்த வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற அறிவிப்பை ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் ரஜினிகாந்த் கதை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக நெல்சன் கூறிய கதை பிடித்து விட்டதாகவும் அவரது இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

 ரஜினிகாந்தின் 170ஆவது படம்

ரஜினிகாந்தின் 170ஆவது படம்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இதர நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளாராம்

இசைஞானி இளையராஜா இசையில்

இசைஞானி இளையராஜா இசையில்

இயக்குனர் பால்கியும் ரஜினிகாந்தும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் ரஜினிகாந்தின் 170 திரைப்படத்தில் இணைய உள்ளது ஒட்டுமொத்த இந்திய சினிமாவே எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் 170ஆவது படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார் என்ற தகவலும் தற்போது கிடைத்துள்ளது.

Recommended Video

Exclusive | Ilayaraja-Gangai Amaran திடீர் சந்திப்பு ஏன்? | Tamil Filmibeat
பழைய புகைப்படம்

பழைய புகைப்படம்

ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. கடைசியாக ரஜினிகாந்தின் வீரா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் இசைஞானி கூட்டணி இணைய இருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட இசைஞானி இளையராஜா ரஜினிகாந்துடன் உள்ள பழைய புகைப்படம் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றி என்றும் என்றென்றும் என பதிவிட்டு இருந்தது சமூகவலைதளத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X