தளபதி 63.. நயன் மட்டுமில்லை.. இந்த இளம் நடிகையும் இருக்கிறார்?
தளபதி 63ல் இந்துஜா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை : அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63ல் நடிகை இந்துஜாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படம் தளபதி 63 எனக் குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை இந்துஜாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்தவர்.
தளபதி 63ல் அவர் விஜய்க்கு தங்கையாக நடிக்கிறாரா இல்லை மற்றொரு நாயகியாக நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.
அடுத்தாண்டு தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கின்றன. எனவே விரைவில் இப்படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications