Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வன்முறையை நம்பும் தமிழ் படங்கள்...இது நல்லதா?
சென்னை: தமிழ் திரைப்படங்கள் வலுவான கதையம்சங்களை புறக்கணித்து வன்முறைகளை அதிகம் புகுத்தும் திரைக்கதைகள் கொண்டவையாக வெளிவருகிறது. இது தனிநபர் வன்முறையை ஊக்குவிப்பதாகவே அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கணவரை பிரிந்து தனிமையில் இருக்கிறேன்…. மனவேதனையில் சீரியல் நடிகை !

திரைத்துறைக்கண்ட 4 முதல்வர்கள்
சமூகத்தில் திரைப்படம் எனும் ஆயுதம் மிக சக்தி வாய்ந்தது. அதிலும் தமிழகத்தில் அரசியலும், சினிமாவும் கைகோர்த்து சினிமாத்துறைச் சார்ந்த 4 பேர் முதல்வர்களாக ஆட்சிக்கும் வந்துள்ளனர். நேரடியாக சினிமா பிரச்சாரத்தை வைத்து ஆட்சியையே பிடித்தவர் எம்ஜிஆர் எனலாம். அவரது வழியில் ஜெயலலிதா அதிக ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்துள்ளார்.

வன்முறையை காட்சியாக்க விரும்பாத எம்ஜிஆர், சிவாஜி
இப்படி சக்தி வாய்ந்த திரையுலகை இதற்கு முன் பலமாக பயன்படுத்திய திரையுலகில் உச்சத்தில் இருந்த எம்ஜிஆரோ, சிவாஜியோ, ரஜினி, கமலோ மற்ற உச்ச நட்சத்திரங்களோ மிகவும் வன்முறையாகவும், ரத்தக்களறியாக, பழிக்கு பழி வாங்கும் எண்ணத்தை தூண்டும் விதத்தில் படங்கள் எடுத்ததில்லை ( விதிவிலக்காக சில படங்கள் இருக்கலாம்).

போற்றப்படும் குடும்ப பாங்கான திரைப்படங்கள்
அதேபோல் குடும்பப்பாங்கான அல்லது காதல்கதை, சமபவத்தை படமாக்குதல், சமூக அக்கறையுள்ள படங்கள் என எதை எடுத்தாலும் வலுவான திரைக்கதை அமைக்கப்பட்டது. பல தமிழ் படங்கள் வலுவான திரைக்கதைக்காக இன்றும் போற்றப்படுகின்றன.

அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய திரைப்படங்கள்
திரைப்படங்களும் ஒருவகையான சமுதாய பங்களிப்பை எப்போதும் செய்து வருகிறது. பல மாற்றங்களை திரைத்துரை மூலம் நிகழ்ந்துள்ளது. சில அரசியல் மாற்றங்களுக்கு கூட திரைப்படங்கள் உதவியுள்ளது. ஆனால் இத்தனை நடந்தும் தமிழ் சினிமாக்கள் வலுவான திரைக்கதை, சமூக அக்கறை, எதிரியை பழிவாங்கணும் என்றால் கூட அது சட்டப்படி நடக்கவேண்டும் என்பதுபோன்ற சமுதாய அக்கறையுடன் படம் எடுத்தனர்.

கிண்டலடிக்கப்பட்ட தெலுங்கு படக்காட்சிகளை மிஞ்சும் தமிழ் படங்கள்
வன்முறைக்காட்சிகள் அதிகம் அமைந்த தெலுங்கு படங்கள் கிண்டலடிக்கப்பட்டன. ஹீரோக்கள் நம்ப முடியாத அளவுக்கு சாகசம் செய்த தெலுங்கு படங்களை கிண்டலடித்தவர்கள் உண்டு. கோணல் மாணலாக நடனமாடிய தெலுங்கின் பிரபல நடிகர்களே தமிழ் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டார்கள். ஆனால் அத்தனையும் தற்போது தமிழ் படங்களில் வந்துவிட்டது. அதை பிரம்மாண்டம் என ரசிக்கும் சூழலும் வந்துவிட்டது.

சட்டத்தின் மீதான நம்பிக்கையை புறக்கணிக்கணிக்கும் திரைக்கதைகள்
சிறுமை கண்டு பொங்கும் ஹீரோக்கள் சட்டத்தின் துணையுடன் வில்லனை வீழ்த்தும் காலம் போய்விட்டது. வலுவில்லாத திரைக்கதைகள், ஹீரோ ஒர்ஷிப், நம்ப முடியாத காட்சிகள் என தமிழ் படங்கள் புதிய பாதைக்கு செல்லத்தொடங்கியுள்ளன. இதனால் வன்முறைக்காட்சிகளும் நம்ப முடியாத சாகசக்காட்சிகளும் காட்சிப்படுத்தப்படுகிறது.

மக்கள் மனதில் வன்முறையை விதைக்கும் படங்கள்
இதனால் இதுபோன்ற படங்களை பார்க்கும் மக்கள் மனதில் எந்தப்பிரச்சினையையும் தீர்க்க வன்முறைதான் என்ற எண்ணமும், மக்கள் போராட்டம் மூலம் எதையும் தீர்க்க முடியாது, யாராவது ஒருவர் ஹீரோ போல் வந்து தீர்க்கணும் என்கிற எண்ணமும் மேலோங்குகிறது. இது ஆபத்தான போக்கு இந்த எண்ணம் வலுப்பெற்றால் சட்டத்தின் மீதான நம்பிக்கை போய்விடும்.

கற்பனைக்கெட்டாத காட்சிகள், ரத்தம், போதைக்கலாச்சாரம் தான் தமிழ் படமா?
அதே போல் இதுபோன்ற படங்களைப்பார்த்து வளரும் இளம் தலைமுறையினர், நம்ப முடியாத கனவுலகத்தில் மிதப்பதும், சாகசம் என்கிற பெயரில் எதையாவது செய்து சட்டத்தின் பிடியில் சிக்குவதும் நடக்கிறது. மது, போதைக்கலாச்சாரம், யாரைவேண்டுமானாலும் தாக்கலாம் போன்ற எண்ணமும் ரத்தம் , கொடூர கொலைகள், ஹீரோ 20 கொலைகள் செய்துவிட்டு மறுநாள் டீக்கடையில் உட்கார்ந்து பேப்பர் படிப்பது போன்ற யதார்த்ததுக்கு புறம்பான காட்சிகளை அமைப்பது, இளைய தலைமுறையினரை அப்படி செய்ய தூண்டும் செயல்.

ஹீரோ கால்ஷீட் கிடைத்தால் போதும்...கதை தேவையில்லை
நவீன சாதனங்கள் திரைத்துறையில் வந்துவிட்டது. அதை தேடி தேடி பயன்படுத்துகிறோம். ஆனாலும் இன்றைய இளம் இயக்குநர்களில் பெரும்பாலானோர் ஒரே மாதிரியான வகைக்கதைகளிலும், வன்முறைக்காட்சிகளிலும், யதார்த்தத்தை மறுக்கும் கதைகளையும் நம்புகின்றனர். ஒரு பெரிய ஹீரோ கால்ஷீட் கிடைத்தால் போதும் அவருக்கு ஏற்றார்போல் கதை பண்ணலாம் என்கிற எண்ணத்தில் மட்டுமே இயங்குகின்றனர்.
Recommended Video

கற்பனைப்பஞ்சம், எதார்த்தமில்லா கதைகளுடன் வலம் வரும் இயக்குநர்கள்
ஒரு காலத்தில் வலுவான திரைக்கதைகள், வலுவான கதாபாத்திரங்கள், குடும்ப ஒழுங்குக்குள் அமைக்கப்பட்ட கதைகள் என வலம் வந்த சினிமாவுக்குள் தற்போது கற்பனை பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உச்ச நட்சத்திரங்கள் தங்களிஷ்டப்படி படம் எடுக்கவேண்டும் என நிர்பந்திப்பதால் பில்டிங் விட்டு பில்டிங் தாவும் கார்கள், பைக்குகள், 50 பேரை கொல்லும் ஹீரோ, ஃபைட்டர் ஜெட்டை எடுத்து அந்நிய நாட்டுக்குள் நுழையும் ஹீரோ என கற்பனை குதிரை கண்டபடி போக ரசிகர்களாலேயே தாங்க முடியவில்லை.

பிரம்மாண்ட மாயையில் உச்ச நடிகர்கள், கதை ஊஹும்...
பிரம்மாண்டம் என்கிற பெயரில் எடுக்கப்படும் படங்களை நோக்கி மிகப்பெரிய நடிகர்களும் நகர்கின்றனர். இது உலக மார்க்கெட், பண வரவு சம்பந்தப்பட்ட ஒன்று என்பதால் தமிழ் சினிமாவின் அடிப்படை தகர்க்கப்படுகிறது. இதை பாதுகாக்காவிட்டால் தமிழ் திரையுலகில் பேர் சொல்லும் படங்கள் இனி இருக்காது.

தியேட்டர் கிடைக்காமல் ஓடிடி நோக்கி நகரும் நல்ல கதையம்சமுள்ள படங்கள்
நல்ல கதையம்சமுள்ள, சமூக கதைகள் அவ்வப்போது வருகின்றன. ஆனால் அவற்றிற்கு தியேட்டர் கிடைப்பதில்லை. ஓடிடி தளம் கிடைக்கவும் போராடும் நிலையில் உள்ளனர். நல்ல படங்களை ஆதரிப்பதும், வன்முறை காட்சிகள் (இதற்கெல்லாம் சென்ஸார் போர்டு இருப்பது மாதிரியே தெரியவில்லை) நிறைந்த படங்களை புறக்கணிப்பது வருங்கால சந்ததிகளுக்கு மட்டுமல்ல, வருங்கால தமிழ் சினிமாவுக்கும் நல்லது என்கின்றனர் விமர்சகர்கள்.