அடுத்தடுத்து பிரச்சனை: அட்லிக்கு நேரம் சரியில்லையோ?
சென்னை: தளபதி 63 படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து அடுத்தடுத்து பிரச்சனையாக உள்ளது.
தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை அடுத்து இயக்குநர் அட்லி விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து தளபதி 63 படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் அந்த கதை தன்னுடையது என்று குறும்பட இயக்குநர் செல்வா புகார் தெரிவித்தார்.
புகார் தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

அட்லி
கதை திருட்டு விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அட்லியின் மேனேஜர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார் செல்வா. கதை திருட்டு பிரச்சனை குறித்து அட்லி வாய் திறக்கவில்லை. அவர் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

புகார்
தளபதி 63 படப்பிடிப்பு தளத்தில் அட்லி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியே அனுப்பியதாக துணை நடிகை கிருஷ்ண தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அட்லியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். அது பொய் புகார் என்று தெரிவித்துள்ளார் அட்லி.

படுகாயம்
ஈவிபி ஃபிலிம் சிட்டியில் தளபதி 63 படப்பிடிப்பு நடந்தபோது ஃபோகஸ் விளக்கு கீழே விழுந்து எலக்ட்ரீஷியன் செல்வராஜ் படுகாயம் அடைந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை விஜய் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அமைதி
தளபதி 63 படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும் அட்லி அமைதியாக நம்பிக்கையுடன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். அட்லிக்கு நேரம் சரியில்லையோ என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











