கிச்சடியா, உப்புமாவா?: பஞ்சாயத்துக்கு வந்த 'கிறுக்கல்கள்' மன்னன்
சென்னை: கிச்சடி தேசிய உணவாக்கப்படும் என்ற தகவல் வெளியானதை அடுத்து அந்த பஞ்சாயத்தில் நடிகர் பார்த்திபனும் குதித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த உணவான கிச்சடி தேசிய உணவாக்கப்படும் என்ற தகவல் வெளியானது. என்னாது கிச்சடி தேசிய உணவா என்று ஆளாளுக்கு அதிர்ச்சி அடைந்தனர்.
மோடிக்கு பிடித்த உணவு என்றால் தேசிய உணவாக்க வேண்டியது தானே என்று நெட்டிசன்ஸ் பொங்கினார்கள்.

ஃபேஸ்புக்
ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கம் போனாலே கிச்சடி மீம்ஸ் மற்றும் விவாதமாக உள்ளது. இந்நிலையில் கிச்சடி தேசிய உணவாக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்துள்ளார்.
மீம்ஸ்
வித்தியாசத்திற்கு பெயர் போன நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கிச்சடி மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பதில்
அப்போ இட்லிய கண்டுபிடிச்ச நாங்கெல்லாம் சொம்பையா🔥😡😠 என பார்த்திபனின் ட்வீட்டுக்கு ஒருவர் பதில் போட்டுள்ளார்.
உதடு
உப்புமானா ஒட்டும்... கிச்சடி உதடு ஒட்டல...
கிச்சடி
யூ ஆர் ஆன்டி இன்டியன்...😂😂


Click it and Unblock the Notifications











