ஒருவழியா சதீஷுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு.. ஆமா இது காதல் திருமணமா? பெரியோரால் நிச்சயிக்கப்பட்டதா?
சென்னை: காமெடி நடிகர் சதீஷின் திருமணம் திரை பிரபலங்கள் வருகையுடன் கோலகலமாக நடந்து முடிந்தது.
கிரேஸி மோகனின் நாடகக்குழுவில் இருந்தவர் நடிகர் சதீஷ். ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஆர்யா, சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

என்கவுன்டருக்கு ஆதரவு
நித்தியானந்தாவை கேலி செய்து அண்மையில் இவர் வெளியிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதேபோல் தெலுங்கானா என்கவுன்டருக்கு ஆதரவாகவும் சதீஷ் குரல் கொடுத்திருந்தார்.

பிரபலங்கள் பங்கேற்பு
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷுக்கு இன்று காலை திருமணம் நடந்து முடிந்தது. இதில் திரைத்துறையை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.

பிரபலங்கள் பங்கேற்பு
நேற்று மாலை சதீஷின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜீவா, உதயநிதி ஸ்டாலின், லியோனி உளிளட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநரின் தங்கை
சிக்ஸர் படத்தின் இயக்குநர் தங்கை சிந்துவை திருமணம் முடித்துள்ளார் சதீஷ். சிக்ஸர் படத்தில் சதீஷ் நடித்திருந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

காதல் திருமணமா?
அப்போதே இது காதல் திருமணம் என தகவல் பரவியது. ஆனால் இது பெரியோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என சிக்ஸர் படத்தின் இயக்குநர் சாச்சின் கடந்த 25 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











