ஜோதிகா 'எஸ்.ஓ.பி.'ன்னு சொல்லியிருந்தால் பிரச்சனையே வந்திருக்காது #Nachiyaar
சென்னை: ஜோதிகா தமிழில் தே. ப. என்று கூறியது பெரிய பிரச்சனையாகிவிட்டது. அதே அவர் ஆங்கிலத்தில் எஸ்ஓபி என்று கூறியிருந்தால் யாரும் கண்டிருந்திருக்க மாட்டார்கள்.
நாச்சியார் பட டீஸரில் ஜோதிகா தே. ப. என்ற கெட்ட வார்த்தை பேசியது தான் இன்று அனைவருக்கும் பெரிய குற்றமாக தெரிகிறது. பாலா சொன்ன வார்த்தையை பேசிய ஜோதிகாவை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

எதுவும் அறியா அவரின் குழந்தைகளின் பெயரையும் இழுத்து அசிங்கமாக மீம்ஸ் போடுகிறார்கள். அவர் என்ன ஆசைப்பட்டா கெட்ட வார்த்தை பேசினார். இயக்குனர் சொன்னதை செய்தார்.
ஜோதிகா தமிழில் கெட்ட வார்த்தை பேசியது தான் பிரச்சனை. இதுவே அவர் அதே வார்த்தையை ஆங்கிலத்தில் எஸ்ஓபி என்று பேசியிருந்தாலும் யாருமே கண்டுக்கவே மாட்டார்கள்.
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசலாம் தமிழில் பேசக் கூடாதாப்பா?


Click it and Unblock the Notifications











