'சீதக்காதி'யை ஓரங்கட்ட கைதானாரா விஷால்?
Recommended Video

சென்னை: விஷால் நேற்று கைதானது சீதக்காதி படத்தை இருட்டடிப்பு செய்ய திட்டம் போட்டு செய்த செயலாக இருக்குமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படம் நேற்று வெளியானது. விஜய் சேதுபதி 75 வயது முதியவராக நடித்திருந்தார். ப்ராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்ததால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
நேற்று காலை சமூக வலைதளங்களில் சீதக்காதி பற்றி தான் பேச்சாக இருந்தது.

விஷால்
தி. நகரில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிட பூட்டை உடைத்தே தீருவேன் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதானார் விஷால். அவர் வாக்குவாதத்தில் ஈடுபடத் துவங்கியதில் இருந்தே மக்களின் கவனம் சீதக்காதியில் இருந்து விஷால் பக்கம் திரும்பிவிட்டது.

ஹேஷ்டேக்
சீதக்காதி பற்றி சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருந்தவர்கள் #Vishal #Vishalarrest #Vishalarrested என்ற ஹேஷ்டேகுகளுடன் விஷால் பற்றி பேசத் துவங்கினர். அவருக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர், சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர், பலர் மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். எப்படியோ சமூக வலைதளங்களில் அவர் பற்றி மட்டும் தான் பேச்சாக கிடந்தது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் படங்களை ரிலீஸ் செய்வதில் விஷால் பிரச்சனை செய்வதாக ஒரு பேச்சு கிளம்பியது. இது குறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் படம் ரிலீஸான அன்று விஷால் கைதானது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

சண்டை
தி. நகர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடங்களுக்கு புதன்கிழமையே பூட்டு போடப்பட்டது. பூட்டு நடவடிக்கை குறித்து சட்டப்படி எதிர்கொள்வோம் என்று விஷாலின் ஆதரவாளரான தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் தெரிவித்தார். அப்படி இருக்கும்போது சரியாக சீதக்காதி ரிலீஸ் அன்று ஏன் பூட்டை உடைப்பேன் என்று விஷால் மல்லுக்கட்ட வேண்டும். பூட்டை உடைப்பதாக இருந்தால் புதன்கிழமையே செய்திருக்கலாமே. சட்டப்படி எதிர்கொள்வோம் என்றவர்கள் எதற்காக பூட்டை உடைக்க முயற்சி செய்ய வேண்டும்?


Click it and Unblock the Notifications











