twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சீனாவில் மொத்தமே 18195 அரங்குகள்தான்... இதில் ஐ-க்கு மட்டும் எப்படி 15000 கிடைக்கும்?!

    By Shankar
    |

    சமீப காலமாக தமிழ் சினிமா செய்தியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி, 'ஐ படத்தை 20 ஆயிரம் அரங்குகளில் வெளியிடப் போகிறார்களாமே... அதுவும் சீனாவில் மட்டுமே 15 ஆயிரம் அரங்குகளாமே... மெய்யாலுமா.. சாத்தியம்தானா?' என்பதுதான்.

    இந்தக் கேள்விக்குக் காரணம், ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன், தனக்கு நெருக்கமான சில நாளிதழ் செய்தியாளர்களிடம் அடித்துவிட்ட தகவல்கள்தான்.

    Is it possible to release Ai in 15k theaters in China..?

    அவர் எக்ஸ்க்ளூசிவ் என்ற பெயரில் வெளியிட்ட தகவலில் ஒன்றுதான் முதல் பாராவில் நீங்கள் படித்தது.

    ஐ படத்தை உலகம் முழுவதும் 20 ஆயிரம் அரங்குகளில் வெளியிடப் போகிறாராம். இவற்றில் சீனாவில் மட்டும் பதினைந்தாயிரம் அரங்குகளாம். மீதி 5000 அரங்குகள் இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலாம்.

    சரி.. ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்வது உண்மையாகவே இருக்கட்டும்.

    அது சாத்தியமா என்பதை மட்டும் பார்க்கலாம்.

    இதுவரை உலக அளவில் அதிக அரங்குகளில் வெளியான படம் ஜேம்ஸ் கேமரூனின் அவதார்தான். அந்தப் படம் கிட்டத்தட்ட 15000 அரங்குகளில் வெளியானது. அதன் பிறகு அந்த சாதனை எந்தப் படத்தாலும் முறியடிக்கப்படவில்லை.

    Is it possible to release Ai in 15k theaters in China..?

    சீனாவில் உள்ள மொத்த அரங்குகளின் எண்ணிக்கை 18195 (2014, ஜனவரி நிலவரப்படி). இவற்றில் 15000 அரங்குகளை எப்படி ஐ படத்துக்கு தருவார்கள்? அதுவும் சம்பந்தமே இல்லாத ஒரு படத்துக்கு! சரி, ஏன் இங்கு இத்தனை திரையரங்குகளில் திரையிடப் போகிறாராம் ஆஸ்கார் ரவி என்றால், சில சண்டைக் காட்சிகளை சீனாவில் படமாக்கியுள்ளார்களாம்!

    முழுக்க முழுக்க சீனாவிலேயே படமாகும் அவங்க ஊர் ஜாக்கி சான் படங்கள் கூட அதிகபட்சம் 4000 அரங்குகளைத் தாண்டியதில்லை என்கிறது புள்ளி விவரம்.

    சீனாவுக்குப் போய் யார் இதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் சொல்லியிருப்பாரோ ஆஸ்கார் ரவி?

    English summary
    Is it possible to release Ai in 15k theaters in China..? Here is an analysis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X