சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் இவ்வளவு தானா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது.
சின்னத்திரையில் இருந்து வந்து பெரிய திரையில் வேகமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாக உள்ளார் சிவகார்த்திகேயன். கோலிவுட் சென்றால் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என சின்னத்திரை பிரபலங்கள் ஆசைப்படும் அளவுக்கு உள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது.

சம்பளம்
சின்னத்திரைக்கு வரும் முன்பு சிவகார்த்திகேயன் திருவிழாக்களில் மிமிக்ரி செய்தாராம். அவ்வாறு மிமிக்ரி செய்து அவர் வாங்கிய முதல் சம்பளம் 1000 ரூபாய் என்று கூறப்படுகிறது.

மோகன் ராஜா
சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கிறார்.

கிறிஸ்துமஸ்
வேலைக்காரன் படம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. ரெமோ படத்திற்கு பிறகு சிவா நடிப்பில் எந்த படமும் இதுவரை ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படம்
இனி ஆண்டுக்கு குறைந்தது 2 படங்களிலாவது நடிப்பேன் என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இனி அடிக்கடி செய்தியாளர்களை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











