»   »  ஏன் அட்லீ, இது தான் 'மெர்சல்' படத்தின் கதையா? #Mersal

ஏன் அட்லீ, இது தான் 'மெர்சல்' படத்தின் கதையா? #Mersal

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் படத்தின் கதை என்று கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் 18ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. விஜய் எத்தனை கதாபாத்திரங்களில் வருகிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அட்லீ தெரிவித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்சல்

மெர்சல்

மெர்சல் படத்தின் கதை என்று கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த கதைப்படி படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறாராம்.

அமெரிக்கா

அமெரிக்கா

அப்பா விஜய், இரட்டையர்களான மகன்கள் விஜய் என மூன்று விஜய்யாம். டாக்டர் விஜய் அமெரிக்காவில் வேலை பார்க்கிறாராம். அங்கு தன்னை போன்றே இருக்கும் மேஜிக் கலைஞர் விஜய்யை சந்திக்கிறாராம்.

அண்ணன்

அண்ணன்

தாங்கள் இரட்டையர்கள் என்பதை டாக்டரும், மேஜிக் கலைஞரும் தெரிந்து கொள்கிறார்களாம். அப்பா விஜய் ஒரு மகனை ராஜஸ்தான் தம்பதிக்கும், மற்றொரு மகனை கோவை சரளாவிடமும் கொடுக்கிறாராம்.

மகன்கள்

மகன்கள்

அப்பா விஜய் கொலை செய்யப்பட்டது மகன்களுக்கு தெரிய வருகிறதாம். அதன் பிறகு மகன்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதையாம்.

English summary
A story has gone viral on social media saying that this is the story of Vijay's upcoming movie Mersal that is hitting the screens for Diwali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil