அடேங்கப்பா...தளபதி 67 ல் 6 வில்லன்களா?...மற்றொரு லோகி சம்பவம் காத்திருக்கு

சென்னை : நடிகர் விஜய் தற்போது தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். பைலிங்குவல் படமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் வாரிசு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

மற்றொரு புறம் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களுடன் அப்செட்டில் உள்ளனர். வாரிசு படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

தளபதி 67 அப்டேட் தான் வேணும்

தளபதி 67 அப்டேட் தான் வேணும்

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வந்தாலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது, விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு மற்றும் அப்டேட்டை தான். தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவலை அவரே பல இடங்களில் உறுதி செய்துள்ளார்.

அதை பற்றி மட்டும் கேட்காதீங்க

அதை பற்றி மட்டும் கேட்காதீங்க

ஆனால் இதுவரை தளபதி 67 படம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.ஆனால் லோகேஷ் கனகராஜ் எங்கு போனாலும் சரி அவரிடம் தளபதி 67 படம் பற்றியே பலரும் கேட்கிறார்கள். சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் இதை பற்றியே கேட்பதால் தற்காலிகமாக சோஷியல் மீடியாவில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் லோகேஷ் கனகராஜ்.தளபதி 67 படம் பற்றி மட்டும் என்னிடம் கேட்காதீர்கள் என்று கூட சொல்லி விட்டார்.

இது தான் தளபதி 67 கதையா

இது தான் தளபதி 67 கதையா

அதே சமயம் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது வரை வெளியான தகவல்களின் படி, தளபதி 67 படத்தில் விஜய், 50 வயது கேங்ஸ்டர் ரோலில் நடிப்பதாகவும், இது பிகில் படத்தில் வரும் மைக்கேல் ராயப்பன் கேரக்டர் போன்றது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது தான் தளபதி 67 படத்திற்காக லோகேஷ் தயாரித்துள்ள கதையா என தெரியவில்லை.

காலா 2 எடுக்க போறாங்களா

காலா 2 எடுக்க போறாங்களா

ஆனால் தளபதி 67 கேங்ஸ்டர் பற்றிய கதை. அதுவும் மும்பை தாதா பற்றிய கதை என்றும், தளபதி 67 படத்தின் ஷுட்டிங் மும்பையில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தளபதி 67 படத்தின் ஷுட்டிங்கிற்காக லொகேஷன் தேடும் பணிகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் அப்படி செய்ய வாய்ப்பில்லை

லோகேஷ் அப்படி செய்ய வாய்ப்பில்லை

தளபதி 67 படம் மும்பை தாதா கதை என்பது உண்மை என்றால் அது காலா 2 அல்லது பிகில் 2 மாதிரி தான் இருக்கும். நிச்சயம் லோகேஷ் கனகராஜ், விஜய்க்காக அப்படி ஒரு கதையை தயார் செய்திருக்க வாய்ப்பே இல்லை. முந்தைய லோகேஷ் கனகராஜ் படங்களை வைத்து பார்த்தால் தளபதி 67 படமும் நிச்சயம் கைதி, சிறை, போலீஸ், போதைப் பொருள் கடத்தல் போன்ற ஏதாவது ஒன்றுடன் தொடர்புடையதாக இருக்கும். இல்லையென்றால் விஜய்யின் மாஸ் குறையாமல் புதிதாக தான் ஒரு கதையை அவர் யோசிக்க வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு அப்டேட் எதிர்பார்க்கலியே

இப்படி ஒரு அப்டேட் எதிர்பார்க்கலியே

இதற்கிடையில் லேட்டஸ்ட் தகவலாக, தளபதி 67 படத்தில் விஜய்க்கு 6 வில்லன்கள் என சொல்லப்படுகிறது. சஞ்சய் தத், ப்ருத்விராஜ் உள்ளிட்ட 6 பேர் வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு தளபதி 67 படத்தில் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் என சொல்லப்படுகிறது. தற்போது நடித்து வரும் வாரிசு படத்திலும் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் என சொல்லப்படும் நிலையில், தளபதி 67 படத்திலும் இரண்டு ஹீரோயின்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X