மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா நயன்தாரா?...உண்மையில் என்ன நடந்தது?

சென்னை : தமிழ், மலையாளம், இந்தி என 3 மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நயன்தாரா பற்றிய தகவல்கள் எதுவானாலும் சோஷியல் மீடியாவில் உடனடியாக டிரெண்டாகி விடுகிறது.

கிட்டதட்ட 20 ஆண்டுகளாக சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, டைரக்டர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து ஜுன் 9 ம் தேதி தான் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இவர் தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அஜித்துடன் ஏகே 62 படத்தில் ஜோடியாக நடிக்க இவரிடம் பேசப்பட்டு வருகிறது.

விரைவில் நயன்தாரா டாக்குமென்ட்ரி

விரைவில் நயன்தாரா டாக்குமென்ட்ரி

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா - விக்னேஷ் சிவன் பற்றி அனைத்து தகவல்களும் வைரலாகி விடுகின்றன. சமீபத்தில் அவர்களின் திருமண டாக்குமென்ட்ரியை வெளியிட முடிவு செய்திருப்பதாக அறிவித்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், இந்த ஆண்டே அதை வெளியிட உள்ளதாகவும் அறிவித்தது.

ப்ரொமோ வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

ப்ரொமோ வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ்

'Nayanthara: Beyond The Fairytale' என்ற டைட்டிலில் டாக்குமென்ட்ரியை வெளியிட உள்ளதாக ப்ரொமோ வெளியிட்ட நெட்ஃபிளிக்ஸ் எந்த தேதியில் வெளியிட உள்ளது என அறிவிக்கவில்லை. இதனால் தேதியை எப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 நயன்தாரா மருத்துவமனையில் அனுமதியா

நயன்தாரா மருத்துவமனையில் அனுமதியா

இந்த சமயத்தில் அதிர்ச்சி தரும் தகவலாக, நயன்தாரா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. அதுவும் தொடர் வாந்தி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்பட்டதால், ஏதாவது குட் நியூஸ் உண்டா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர்.

உண்மையில் என்ன நடந்தது ?

உண்மையில் என்ன நடந்தது ?

ஆனால் நயன்தாரா தரப்பில் இது பற்றி விசாரித்த போது, அப்படி எதுவும் நடக்கவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பொய்யானது. நயன்தாராவிற்கு உடல்நல பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அவர் ஏற்கனவே கமிட்டான டைரக்டர் அஹ்மத் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வருகிறார் என விளக்கம் அளிக்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X